உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய தலைநகர் அமராவதிக்கு ரூ.13,600 கோடி நிதி

புதிய தலைநகர் அமராவதிக்கு ரூ.13,600 கோடி நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு உலகவங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இரண்டும் சேர்ந்து 13,600 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முன்வந்துள்ளன.சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக்க,சுமார் 15 ஆயிரம் கோடி நிதி அளிக்க உள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள், வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஆந்திர அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு, முதற்கட்டமாக, ரூ.13,600 கோடியை,வரும் 2024ம் ஜனவரி மாதம் விடுவிக்கிறது.இதற்கான மொத்த திட்டமதிப்பீடு ரூ.15 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியான ரூ.1,400 கோடியை மத்திய அரசு அளிக்கும்.இந்த திட்டத்திற்கான மொத்த நிதியும், ஐந்து ஆண்டுகளில் பெறப்படும்.இந்த திட்டத்திற்கு, உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி, கடன் மற்றும் உத்தரவாதம் அளிக்கிறது. மற்ற வங்கியும் ஏடிபியும் தலா ரூ.6,800 கோடி நிதி அளிக்கிறது. உலகவங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளின் கடனை மத்திய அரசு பின்னர் செலுத்தும்.முதல் கட்டமாக, அடுத்தாண்டு ஜனவரி-30ம் தேதி நிதி அளிக்கப்படும். இந்த நிதியை 5 ஆண்டுகளுக்குள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.முதல் கட்ட நிதியில் ஆந்திர அரசு எவ்வாறு செயல்படுகிறதோ, அதை பார்த்து இரண்டாவது கட்ட நிதி விரைவாக வழங்கப்படும்.இந்த திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் மட்டும் உதவ வில்லை, சர்வதேச அளவில் சிறந்த வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கப்பெறுகிறது.இத்திட்டத்திற்கு ஏற்கனவே, சந்திரபாபு நாயுடு, 2014 மற்றும் 2019ம் ஆண்டு காலகட்டங்களில் முதல்வராக இருந்த போது, 34,390 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களில், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக ரீதியிலான பிளாட்டுகள் மற்றும் தலைநகர் பாதுகாப்புக்கான அனைத்து வேலைகளும் நடந்தன. பின்னர் வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, ஆந்திராவுக்கு 3 தலைநகர் உருவாக்கப்படும் என கூறியது. இந்நிலையில், மீண்டும் முதல்வராகிய சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில், அங்கம் வகிப்பதால், இதற்கான ஏற்பாடுகளை விரைவு படுத்தி திட்ட நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம்வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து இந்த திட்டத்திற்கான நிதியை அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
அக் 19, 2024 09:37

Issue such Extravagant Loans only on Personal Surety of Chandrababu Naidu, his PartyMen & his Benami Contractors who will Loot atleast 25%


Ramesh Sargam
அக் 18, 2024 20:12

சந்திரபாபுவின் இந்த அமராவதி தலைநகர் திட்டம் சரியில்லை. ஏற்கனவே முன்பு முதல்வராக இருந்தபோது பல கோடி விரயம் செய்தார். பிறகு வந்த ஜெகன் பல கோடி விரயம் செய்து தலைநகரை விசாகபட்டினத்துக்கு மாற்ற நடவடிக்கைகள எடுத்தார். இப்பொழுது மீண்டும் நாயுடு அமராவதியில் தலை நகரை நிறுவ மேலும் பலகோடிகளை விரயம் செய்வது சரியல்ல. யார் மதிப்பிற்குரிய அப்பன், ஆத்தா பணம், இவர்கள் விரயம் செய்வது? உலக வங்கியோ எந்த வாங்கியோ, யார் கடன் கொடுத்தாலும் அது மக்கள் தலையில் வரியாகவும் வேறு பல விதமாகவும் விழும். இப்படி மக்களின் வரிப்பணத்தை அனாவசியமாக விரயம் செய்பவர்களை மத்திய அரசோ அல்லது உச்சநீதிமன்றமோ தட்டிகேட்கவேண்டும். மேலும் எந்த வங்கி கடன்கொடுக்க முன்வந்தாலும், மக்களை கேட்டு கொடுக்க வேண்டும். ஏன் மக்கள் என்றால், அவர்கள் தலையில்தான் அத்தனை கடனும் விழும். நாயுடு மீதோ அல்லது ஜெகன் மீதோ அல்ல.


Smba
அக் 18, 2024 17:41

முன்பு வந்தஅரி சொரி மீண்டும் வரனும்


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 17:19

முதலில் ஒரு நெய் பேக்டரி யும், ஒரு லட்டு பேக்டரியும் கட்டுங்கோ.வைஷ்ணவா ல்லாம் பாவம், பெருமாள் பத்தியும், திருப்பதி பத்தியும் என்ன பேசறது ன்னு தெரியாம முழிச்சிண்டிருக்கா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை