உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது ரொம்ப ஓவர்: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

இது ரொம்ப ஓவர்: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

மும்பை: ஒரு வழக்கில் 15 மணி நேரம் விசாரணை நடத்துவது என்பது வீரமல்ல எனக்கூறியுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட், அது மனிதநேயத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்து உள்ளது.ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வர் என்பவரை கடந்த ஜூலை மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி மகாபீர் சிங் சிந்து கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர், ஜூலை 19 ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜர் ஆனார். விசாரணையை துவங்கிய அதிகாரிகள், மறுநாள் காலை 1:40 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் 14 நிமிடங்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இது அமலாக்கத்துறையின் தைரியம் அல்ல. இது மனித நேயத்திற்கு எதிரானது.வரும் காலத்தில் அரசியல்சாசனத்தின் 21வது சட்டப்படி, அமலாக்கத்துறையானது இதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
செப் 26, 2024 05:54

பொருளாதார குற்றவாளிகள் செய்யும் டகால்டி வேலைகளுக்கு முன்னாள் நிதி அமைச்சரே உதாரணம்.


நிக்கோல்தாம்சன்
செப் 26, 2024 05:42

இந்திய நீதிமன்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது வேதனையளிக்கிறது


தாமரை மலர்கிறது
செப் 26, 2024 01:44

உண்மைகள் வெளிவரமெனில் தொடர்ச்சியான விசாரணை அனுமதிக்கப்படவேண்டும்.


spr
செப் 25, 2024 22:10

"ஒரு வழக்கில் 15 மணி நேரம் விசாரணை நடத்துவது வீரமல்ல எனக்கூறியுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட், அது மனிதநேயத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்து உள்ளது." அவர்கள் தொடர்ந்து 15 மணி நேரம் விசாரணை செய்ததை, நீதிமன்றம் பாராட்டாவிட்டாலும், கண்டிக்காமல் இருக்கலாம் தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை நல்ல வேளை பலரின் எதிர்ப்பினால் தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது குறை சொல்லாத நீதிமன்றம், விசாரணை அதிகாரிகள் கைகள் பலவகையிலும் கட்டப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை செய்ததை மனித நேயம் உரிமை என்றெல்லாம் பேசாமலிருக்கலாம். அவர்களை அடித்துத் துன்புறுத்தினால் அதனைக் குறை சொல்லலாம் தொடர்ந்து, பல மணி நேரம் விசாரணை செய்தால் ஒருவேளை தன்னையும் மறந்து உண்மையை ஒத்துக்க கொள்ளலாம் என்று அதிகாரிகள் நினைத்திருக்கலாம் அல்லவா?


Raj S
செப் 25, 2024 22:09

இந்த நீதிபதிகளுக்கு வெட்டி அரட்டை அடிக்கிறதே வேலையாகி போச்சு... பல வருடமா எத்தனையோ வழக்கு முடிக்காம இருக்கு, அப்போ அந்த வழக்குல நியாயம் கிடைக்கவேண்டிய பலருக்கு அது கிடைக்காம இருக்கு... அதுக்கு ஒன்னும் செய்ய தெரியாது... அடுத்தவங்க பத்தி அறிவாளி மாதிரி பேசறதே இவங்களுக்கு வேலை ஆகி போச்சு...


theruvasagan
செப் 25, 2024 21:59

விசாரணையை நீண்ட நேரம் நடத்தக்கூடாது. ஆனால் ஊழல் வழக்குகளை 20 25 வருடங்கள் வரை இழுத்தடிக்கலாம். அதற்கு அப்புறம் தீரப்பை உடனே சொல்லாமல் நிறுத்தி வைத்து பிறகு சாவகாசமாக சொல்லலாம். சரிதானே.


subramanian
செப் 25, 2024 21:57

தமிழ் நாடு காவல்துறை திமுக ஆட்சியில் இருந்தால் எவ்வளவு மட்டமான முறையில் நடந்து கொள்வார்கள் என்று உச்சநீதிமன்றம் பார்த்தால் மொத்த துறையும் கலைக்கப்பட்டு துரத்த படும்.


Nallappan
செப் 25, 2024 21:50

பெரும்பாலும் அமலாக்க துறை விசாரணையில் வருபவர்கள் எல்லாருமே விசாரணை இல்லாமல் தண்டனை கொடுக்கபட வேண்டியவர்கள் ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக விசாரணை மட்டுமே நடக்கிறது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை