மேலும் செய்திகள்
மாவட்ட ஹாக்கி போட்டி; மாணவியர் அசத்தல்
16-Nov-2024
தேசிய அளவிலான கபடி போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்நாடக அணியில், விஜயபுரா மாணவி தேர்வாகி உள்ளார்.விஜயபுரா மாவட்டம், பாபலேஸ்வராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா அசோக் பிராதர், 14. திகானி பிடாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே கபடி போட்டியில் விளையாடி வருகிறார். இவர் படிக்கும் பள்ளி சார்பில் குணாதல்லில் நடந்த மண்டல அளவிலும், திகோடாவில் நடந்த தாலுகா அளவிலுமான கபடி போட்டியில், இப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.இது தவிர, இப்பள்ளி மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலும் சிறப்பாக விளையாடி உள்ளது. இதில், ஐஸ்வர்யாவின் செயல்பாடு, நடுவர்களுக்கு பிடித்துவிட்டது.தற்போது, இவர் மஹாராஷ்டிராவில் நடக்கும் 14 வயதுக்கு உட்படடோருக்கான தேசிய கபடி போட்டியில், கர்நாடகா சார்பில் விளையாட தேர்வாகி உள்ளார். தங்கள் பள்ளி மாணவி, தேசிய அளவில் விளையாட, கர்நாடகா அணியில் இடம் பிடித்திருப்பதற்கு, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மாணவி ஐஸ்வர்யா பிராதர் கூறுகையில், ''கர்நாடக அணியில் நான் இடம்பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோன்று தேசிய அணியிலும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவை அனைத்துக்கும், பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணம்,'' என்றார். - நமது நிருபர் -
16-Nov-2024