உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு போலீசார் வலை

உ.பி.,யில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு போலீசார் வலை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பாலியாவில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப்பிரதேசத்தின் பாலியாவில் 14 வயது சிறுமியை, சூரஜ் சோனி என்ற இளைஞர் உட்பட மூன்று பேர் துப்பாக்கி மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். சிறுமியை மூன்று இளைஞர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இது குறித்து சிறுமியின் உறவினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் 14 வயது சிறுமி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வெளியே நின்ற சிறுமியை இளைஞர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர்கள் மூன்று பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இளைஞர்கள் மூன்று பேர் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
மார் 17, 2025 15:30

குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே வாரத்தில் தூக்கு ..... பிறகு எப்படி நடக்கும் பார்க்கலாம் .....


Ramesh Sargam
மார் 17, 2025 12:00

யோகிஜியின் ஆட்சியில் இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை அதிகம் இருக்குமே? இந்நேரம் குற்றவாளிகளை ஓடவிட்டு என்கவுண்டர் செய்திருக்கவேண்டும்...?


சமீபத்திய செய்தி