நக்சல் ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்: 15 பேர் சரண்
சுக்மா: சத்தீஸ்கரில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட மேலும் 15 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு,விட்டு, சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.48 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.நக்சல்களை ஒழிப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாத்வி ஹித்மா என்ற முக்கிய தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலனாக ஏராளமான நக்சல்கள் தங்கள் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு சரண் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 15 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.இந்த விவரத்தை சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் தவான் வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது; சரண் அடைந்தவர்களில் நக்கல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் உள்ளனர். அவர்களில் 5 பெண்களும் அடங்குவர். 4 பேர் தலா ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளவர்கள். இரண்டு பேருக்கு தலா ரூ.5 லட்சமும், ரூ.3 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரை 3 பேருக்கும் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக ரூ.48 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டவர்கள் இன்று சரண் அடைந்துள்ளனர். இவ்வாறு எஸ்.பி., கரண் தவான் கூறி உள்ளார்.