உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: 15 வயது சிறுமியை இரண்டு முறை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது நண்பர் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர், 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனை, அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாக சிறுமியை மிரட்டி வந்தனர்.இவ்வாறு மிரட்டி அந்தச்சிறுமியை மீண்டும் 6 பேர் கும்பல் இரண்டாவது முறையாக கூட்டு பலாத்காரம் செய்தனர்.பிறகும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பயந்து போன அந்தச்சிறுமி போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் போக்சோ மற்றும் பிஎன்எஸ் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். இதனையறிந்த நான்கு பேர் தலைமறைவாகினர். அவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜூன் 02, 2025 14:45

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் வெளியே வருகிறது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் வெளியே வராமல் மறைத்து விடுகின்றனர்.


அப்பாவி
ஜூன் 02, 2025 13:33

இங்கே எங்கே நடந்தாலும் அது இந்திய மாடல்டா. போங்க. போங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 01, 2025 23:59

மர்ம மனிதர்களா ??


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 22:04

வெங்காயத்தின் பூர்வீக மண்ணு .


அப்பாவி
ஜூன் 01, 2025 22:02

நம்ம ஊரு பொள்ளாச்சி தடியன்களை அப்பவே போட்டுத் தள்ளியிருந்தா இப்போ இந்த தடியன்கள் பயப்படுவாங்க.


RAJ
ஜூன் 01, 2025 21:33

சட்டங்கள் கடுமை ஆகும்வரை குற்றங்கள் குறையாது .. நம்முடைய சட்டப்புத்தகம் ரொம்ப பழசு ... நிறைய மாற்றங்கள் தேவை.. .. உடனடி தேவை..


Ganapathy
ஜூன் 01, 2025 20:31

நீதித்துறையின் பொறுப்பற்ற போக்கும் ஆட்சியின் லட்சணமும் காவல் துறையின் ஆண்மையற்ற ஆளும் கட்சிக்கு அடிமை ஏவலாக இருப்பதும் ,பொறுப்பற்ற பெற்றோரும் இந்த தலைமுறையின் "எல்லாம் எனக்குத் தெரியும்" போக்கும்தான் காரணம்.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:24

சிறுமியர் பலாத்காரம் தமிழகத்திலிருந்து, திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவிற்கும் பரவி இருக்கிறது. மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.


Pandi Muni
ஜூன் 01, 2025 18:34

அதெப்புடிடா ஒரே மாதிரி புத்திகொண்டவனுக ஆளும் மாநிலங்களில ரேப்பும் அதிகமாவே இருக்கு?


Sudha
ஜூன் 01, 2025 18:26

சிறுமியின் கையில் துப்பாக்கியை கொடுத்து தீர்ப்பு வழங்கலாம் அனைத்து கயவர்கழும் சாகும்வரை வரை சுட அனுமதிக்கலாம்.


முக்கிய வீடியோ