உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பலில் 150 ஆண்டு கால படிக்கிணறு கண்டுபிடிப்பு

சம்பலில் 150 ஆண்டு கால படிக்கிணறு கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் மின்சாரம் திருடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பழமையான ஹனுமன் கோவில் பாழடைந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே, சம்பல் மாவட்டத்தின் சண்டாசி பகுதியில் பழமையான படிக்கிணறு இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 400 மீட்டர் கொண்ட அந்த படிக்கிணறு 4 தளங்களை கொண்டுள்ளது. அதில், 2வது மற்றும் 3வது தளங்கள் மார்பிள் கற்களை வைத்தும், மேல் தளம் செங்கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4 அறைகள் இருந்துள்ளது. பிலாரி அரசரின் தாத்தா அரசராக இருந்த போது, இந்த படிக்கிணறு கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா பென்சியா கூறுகையில், 'இந்த படிக்கிணறு முழுக்க முழுக்க களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது. மேல் இருக்கும் மண்ணை நாகர் பலிகா குழு அகற்றியுள்ளது. தற்போது, வெளியே 210 சதுர மீட்டர் மட்டுமே உள்ளது. எஞ்சிய பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Indhuindian
டிச 23, 2024 08:17

150 ஆண்டுக்கு முன்னாடி இருந்ததெல்லாம் இப்படி சுலபமா கண்டுபிடிக்கிறாங்க ஆனா நம்ம வேங்கைவயலிலே ரெண்டு வருஷம் முன்னாடி நடந்ததைக்கூட கண்டு பிடிக்கமுடியலையே ஒரு வேலை இன்னும் ஒரு நூத்து நாற்பத்தெட்டு வருஷம் காக்க வேண்டியிருக்குமோ நமக்கு ஆயுசு இல்லே வேறே யாராவது தெரிஞ்சிக்கட்டும்


Oru Indiyan
டிச 22, 2024 22:22

இந்த படிக்கிணறு கண்டிப்பாக ஹிந்து அரசர் கட்டவில்லை


N Sasikumar Yadhav
டிச 22, 2024 23:43

ஆம் கொள்ளையடிக்க வந்த இஸ்லாமியர்கள் இங்கிலாந்திலிருந்து வந்த கிருத்துவவர்கள்தான் கட்டியதாம்


Sudarsan Ragavendran
டிச 23, 2024 06:34

உங்களிடம் sonnargala?


Dharmavaan
டிச 23, 2024 07:09

இந்தியன் என்பதை இஸ்லாமியன் என்று மாற்று


புதிய வீடியோ