உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 16 பேர் இன்று ( ஜூன் 02) போலீசாரிடம் சரண் அடைந்தனர். கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இன்று சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட நக்சலைட்கள் 16 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சரண் அடைந்ததன் மூலம், கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.தற்போது, அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N.Purushothaman
ஜூன் 02, 2025 19:14

பாரத நலன் கருதி கம்யூனிஸ்ட் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் ....


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2025 19:00

மண்ணு மோஹன் இத்தாலிய பினாமி அரசாக இருந்தால் பாதுகாப்பு படையினரின் கையை கட்டிப் போட்டி ருப்பார்கள். சுதந்திரம் கிடையாது. இத்தனை அப்பாவி மக்கள் , அத்தனை பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் நீப்பு என்று தானே முன்பு நியூஸ் வரும்? அதை விடுங்க. இப்போது 26 பெண்கள் குங்குமத்தை அழித்த பாகிஸ்தானுக்கு கண்டனம் மட்டுமே சொல்லியிருப்பானுவ.


Iniyan
ஜூன் 02, 2025 18:06

கம்யூனிஸ்ட்கள் விஷ வேர்கள் நக்சல்கள் கிளை அவ்வளவே. நக்ஸல்களை ஒழிப்பது மட்டும் இல்லாது இங்குள்ள கம்யூனிஸ்ட்களையும் ஒழிக்க வேண்டும்


Nada Rajan
ஜூன் 02, 2025 15:50

நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்