உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் கஸ்டடியில் 16 வயது தலித் சிறுவனுக்கு டார்ச்சர்; உ.பி.,யில் நடந்த ஜெய்பீம் சம்பவம்

போலீஸ் கஸ்டடியில் 16 வயது தலித் சிறுவனுக்கு டார்ச்சர்; உ.பி.,யில் நடந்த ஜெய்பீம் சம்பவம்

லக்னோ: உ.பி.யில் 16 வயது தலித் சிறுவன் சித்ரவதை செய்யப்பட்டு, போலீஸ் கஸ்டடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு

கடந்த 3ம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாகக் கூறி 16 வயது சிறுவனை ஹேரி போலீஸ் கைது செய்தது. திருட்டு சம்பவம் தொடர்பாக சிறுவனை போலீசார் கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் லக்னோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உத்தரவு

போலீஸ் கஸ்டடியில் தலித் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கணேஷ் பிரசாத் சஹா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்

இதனிடையே, சிறுவனின் சொந்த ஊரான சிஸவான் காலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரி, தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ms Mahadevan Mahadevan
செப் 19, 2024 16:19

காவல் துறை அத்து மிறல் அதிகமாகி கொண்டு வருகிறது. காவல் துறையை நீதி துறையின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஆளும் கட்சி இடம் இருந்தும் அரசிடம் இருந்தும் காவல் துறை விடுவிக்கப் பட வேண்டும்


VENKATASUBRAMANIAN
செப் 19, 2024 08:26

தமிழ்நாட்டில் தினமும் இதுபோல் நடக்கிறது. இதை செய்தியாக போடாமல் உபியில் நடந்தால் உடனே போடுகிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 09:32

எங்கு நடந்தாலும் குற்றம் குற்றமாகவே பார்க்கப்படவேண்டும் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை