உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பால் பஞ்சாமிர்தம் சாப்பிட்ட 160 பேருக்கு ரேபிஸ் பாதிப்பு?

 பால் பஞ்சாமிர்தம் சாப்பிட்ட 160 பேருக்கு ரேபிஸ் பாதிப்பு?

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில், நாய் கடித்த பசுவின் பாலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் சாப்பிட்ட, 160 பேர் ரேபிஸ் பீதியில் சிகிச்சை பெறுகின்றனர். உ.பி.,யின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ரம்தி கிராமத்தில் மதச்சடங்கு நடத்தப்பட்டது. இதில், பசும்பால் கலந்த பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தர்மேந்திரா கவுர் என்பவருக்கு சொந்தமான பசுவில் இருந்து அந்த பால் பெறப்பட்டது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் தெருநாய் கடித்த அந்த பசு, கடந்த 15ல், 'ரேபிஸ்' தொற்றால் பாதிக்கப்பட்டு திடீரென இறந்துவிட்டது. இதனால் பஞ்சாமிர்தம் சாப்பிட்ட பக்தர்கள் தங்களுக்கும், 'ரேபிஸ்' எனப்படும் வெறிநாய்க்கடி பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு திரளாக சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள், அப்பகுதி மக்கள் 160 பேருக்கு முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி போட்டனர். அடுத்த ஏழு நாளில் அடுத்த தடுப்பூசி போடவும் அறிவுறுத்தினர். இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர் டாக்டர் திவாரி கூறுகையில், ''நாய் கடித்த பசுவின் பாலை குடித்தால் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட மக்களை அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ