17 கோடி வேலைவாய்ப்புகள்!
பிரதமர் மோடி ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில், 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், வெறும் 3 கோடி வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டன. இதை நாங்கள் சொல்லவில்லை; ரிசர்வ் வங்கியின் தரவுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மன்சுக் மாண்டவியா மத்திய அமைச்சர், பா.ஜ.,அடிபணிய வேண்டாம்!
நம் நாட்டின் பொருளாதாரத்தை குறைமதிப்பிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆதாரமற்ற கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எல்லாம் நாம் அடிபணிய வேண்டாம். ஆனந்த் சர்மா மூத்த தலைவர், காங்.,தங்குமிடம் வழங்கக்கூடாது!
அசாமில், ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மக்கள் தங்குமிடம் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடும். மக்கள் ஒத்துழைத்தால், ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை தொடரும். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பரா என தெரியவில்லை. ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,