உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 எம்.பி.,க்க ளுக்கு சன்சத் ரத்னா விருது

17 எம்.பி.,க்க ளுக்கு சன்சத் ரத்னா விருது

புதுடில்லி: பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜார்க்கண்ட் பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு, 'சன்சத் ரத்னா' விருது நேற்று வழங்கப்பட்டது. பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்களுக்கு 2025ம் ஆண்டுக்கான 'சன்சத் ரத்னா' விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், சரத் சந்திர பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த எம்.பி.,யும் அவரது மகளுமான சுப்ரியா சுலே, ஜார்க்கண்ட் பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டன. அதேபோல் பார்லிமென்ட்டில் மூன்று முறைக்கும் மேலாக எம்.பி.,யாக சிறந்த பங்களிப்பை அளித்ததுடன், ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் வகையில் செயல்பட்டதற்காக சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி., ஸ்ரீரங் அப்பா சந்து பார்னே, கேரள எம்.பி., என்.கே.பிரேமசந்த் ஆகிய உறுப்பினர்களுக்கு சிறப்பு நடுவர் விருது களும் அறிவிக்கப்பட்டன. இதேபோல் மற்ற விருதுகளுக்கு தமிழகத்தின் தி.மு.க., எம்.பி., அண்ணாதுரை உட்பட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, பார்லிமென்ட் நிலைக்குழுக்களில் சிறந்த பங்களிப்பை அளித்த பா.ஜ., - எம்.பி., பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையிலான நிதி நிலைக்குழு, காங்கிரஸ் எம்.பி., சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாய நிலைக்குழு ஆகியவற்றிற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. டில்லியில் நேற்று நடந் த விழாவில் பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, சன்சத் ரத்னா விருதுகளை வழங்கி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை