உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுக்கு 17 பேர் தேர்வு

சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுக்கு 17 பேர் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் எம்.பி.,க்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, அவர்களை கவுரவிக்கும் வகையில், 'ப்ரைம் பாயின்ட் பவுன்டேஷன்' என்ற தனியார் நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது.இதன்படி கடந்த 16 மற்றும் 17வது லோக்சபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களில் சிறந்த பங்களிப்பை அளித்த நபர்களை, தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு கமிஷனின் தலைவர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தலைமையிலான குழு கண்டறிந்து தேர்வு செய்துள்ளது.இதில், பார்லிமென்டுடின் ஜனநாயகத்திற்கு தொடர்ந்து சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பரத்ருகரி மகதப், சரத் பவார் தேசியவாத காங்கிரசின் எம்.பி., சுப்ரியா சுலே, சமூக புரட்சி கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சிவசேனாவின் ஸ்ரீரங் அப்ப பார்னே ஆகிய நான்கு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் பா.ஜ.,வின் ஸ்மிதா வாக், வித்யூத் பாரன் மஹத்தோ, பி.பி.சவுத்ரி, பிரவீன் பட்டேல், மேத்தா குல்கர்னி, நிஷிகாந்த் துபே, ரவி கிஷன், மதன் ரத்தோர், திலீப் சாய்கியா, காங்கிரசின் வர்ஷா கெய்க்வாட்.சிவசேனாவின் கண்பத் மஹாஸ்க், உத்தவ் சிவசேனா பிரிவின் அரவிந்த் சாவந்த், தி.மு.க.,வின் அண்ணாதுரை உள்ளிட்டோரும் சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bhaskaran
மே 20, 2025 21:45

பல் போனதால் அதிகம் கேள்வி கேட்க முடியவில்லை


PR Makudeswaran
மே 19, 2025 10:34

ஏங்க எங்க தி மு க எம் பி களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு ஒரு விருது அல்ல ஒரு விருந்தும் கிடையாதா


Barakat Ali
மே 19, 2025 09:02

தி.மு.க.,வின் அண்ணாதுரை உள்ளிட்டோரும் சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர் ..... சிரிச்சேன் .....


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 07:10

ஸ்டாலினுக்கு சிறந்த முதலமைச்சர் விருது கிடைக்குமா. எப்போ குடுப்பீங்க எப்படி குடுப்பீங்க


Seekayyes
மே 19, 2025 05:48

திமுகவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு? ஹி,ஹி,ஹி, எதை வைச்சு குடுக்குறீங்க?


Raj
மே 19, 2025 08:46

பிஜேபி க்கு எப்படி குடுத்தாங்க அப்படித்தான்


xyzabc
மே 19, 2025 00:26

திரு மா விற்கு இந்த விருதை எப்ப கொடுப்பாங்க ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை