உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு மணிநேரத்தில் 1.76 லட்சம் கார்கள் முன் பதிவு: மஹிந்திரா நிறுவனம் சாதனை!

ஒரு மணிநேரத்தில் 1.76 லட்சம் கார்கள் முன் பதிவு: மஹிந்திரா நிறுவனம் சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது.கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது.இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய தார் ராக்ஸ் கார் விற்பனை புக்கிங் ஆர்டர் இன்று தொடங்கியது. தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே,(காலை 11 மணியளவில்) 1,76,218 கார்கள் புக் ஆகிவிட்டன. சராசரியாக, ஒரு நிமிடத்திற்கு 2,937 கார்கள் புக் ஆகி உள்ளது.தசரா திருவிழாவிலிருந்து தான் நாங்கள் கார்களை டெலிவரி செய்ய உள்ளோம்.ஒரு மாதத்திற்கு 9,500 முதல் 10,000 கார்கள் வரை உற்பத்தி செய்ய இருக்கிறோம். ஏற்கனவே, ஸ்கார்ப்பியோ-என் அரை மணி நேரத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தேர்வு செய்துள்ள மாடல்களை பொறுத்து, எப்போது டெலிவரி செய்வோம் என தெரிவிப்போம்.மஹிந்திரா தார் ராக்ஸ் 4 எக்ஸ் 4 வகைகளை வாங்குபவர்களுக்கு, குறிப்பாக அடர் மோச்சா பிரவுன் இன்டீரியர் ஷேடைத் தேர்வு செய்பவர்கள், தங்கள் வாகனத்தைப் பெற குறைந்தபட்சம் ஜனவரி 2025 இறுதி வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் காரின் விலை ₹ 13 லட்சம் முதல் ₹ 22.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பெரிய குத்தூசி
அக் 03, 2024 20:03

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவின் இலவசத்தில் தார் ராக் சை கொடுத்துவிட்டு தமிழ் நாட்டில் ஓடும் லிப்ஸ்டிக் அடித்த பிங்க் விடியா பஸ் மற்றும் ஓட்டை உடைசல் பஸ் சை யெல்லாம் எல்லாம் ஸ்க்ராப் செய்து விடலாம். எலெக்ட்ரிசியன், பிளம்பர், பைன்டர், கொத்தனார் எவனும் நாள் கூலி ரூ.1500 க்கு குறைஞ்சி வேலைக்கு வருவது கிடையாது. 4-5 மணி நேரத்துக்கு ரூ.1000 கேக்கறான். எங்கே ஏழை , தாழ்த்தப்பட்டவர் இருக்கார் . பைக் மற்றும் ஸ்மால் கார் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர் என யாரவது இருந்தால் காண்பியுங்கள்.


Sivagiri
அக் 03, 2024 19:20

பழைய போலீஸ் ஜீப் வண்டி - பேர் மட்டும் புதுசு . . .


David DS
அக் 03, 2024 19:16

பிரசவம் ஓசி, வீடு ஓசி, இடம் ஓசி, படிப்பு ஓசி, வேலையில ஒதுக்கீடு, இப்போ காரும் ஓசி வேணுமா


Dharmavaan
அக் 03, 2024 17:37

ராஜனால் செய்யமுடியவில்லை எனவே பொறாமை


ramarajpd
அக் 03, 2024 17:07

மகிந்திரா வின் ஷேர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் அது உங்களுக்கு நல்ல நண்பனாக இருக்கும். அதேபோல் IRFC ஷேரும் வாங்கிக்கலாம். நன்றி ?️?️


sundarsvpr
அக் 03, 2024 16:46

அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் மூன்று அல்லது நான்கு நபர்கள் சைக்கிள் வைத்துஇருந்தனர். இதில் நிச்சியம் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் கார்கள் முன் பதிவு என்பது ஒரு ஆச்சரியமான செய்தியல்ல. இதில் தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை என்பதுதான் செய்தியாய் வரவேண்டும். அதுதான் சாதனை. நாட்டின் செல்வம்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 03, 2024 17:08

சுந்தர், பப்பு போலி காந்தியின் காற்று உங்கள் மீது பட்டுவித்ததோ


Jagan (Proud Sangi)
அக் 03, 2024 18:55

எப்பப்பாரு தாழ்த்தப்பட்டவர் பின்தங்கியோர் புலம்பல். உழைக்க சொல், சம்பாதிக்க சொல். எல்லாம் இலவசமா வராது


Yaro Oruvan
அக் 03, 2024 19:45

படிங்க.. வேலை செய்யுங்க... சும்மா குந்திகினு ஸ்காலர்ஷிப் /ஒதுக்கீடு / கோட்டா /போனஸ் மார்க் /ஓட்டுக்கு நோட்டு/ஜாதி ஜாதின்னு புலம்பல் ... இத மட்டும் செஞ்சா எதையும் வாங்க முடியாது.. கம்பிய எடுக்கோணும். தோண்டோனும்.. நடோனும்.. அப்புறம் எல்லாம் வாங்கலாம்.


spr
அக் 03, 2024 16:37

பல லட்சங்களைக் கொடுத்து, இத்தனை குறுகிய நேரத்துக்குள் சிற்றுந்துகளை வாங்கப் பதிவு செய்யும் இந்த நாடு ஒரு ஏழை நாடா? வளர்ந்த நாடா? இதற்கான பாராட்டுதல்களை மோடிக்குத் தர எதிர்க்கட்சிகளோடு புள்ளிகளை வைத்துக் கோலம் போடும் திரு ரகுராம் ராஜன் போன்ற புத்தகப் புழுக்கள், பொருளாதார அறிஞர்கள் ஏன் தயங்குகிறார்கள்? காழ்ப்புணர்ச்சிதானே ஆனால் இவற்றில் எத்தனை லட்சம் கருப்பு என்பது அரசுக்குத் தெரியும், வாங்குபவருக்குத் தெரியும் நமக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்


சமீபத்திய செய்தி