உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது: டில்லியில் சல்லடை போடும் போலீஸ்!

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது: டில்லியில் சல்லடை போடும் போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டில்லியின் வட மேற்கு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அசோக் விகார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட தெருக்களில் சல்லடை போடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2ir20thv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் குழந்தைகள் 3 பேர் அடங்குவர். இதில், திருநங்கைகள் போல் மாறுவேடமிட்ட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் உடை மற்றும் ஹார்மோன் சிகிச்சையை கூட மேற்கொண்டு தங்கள் தோற்றத்தையும் குரலையும் மாற்றி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் டாக்கா, குல்னா, காசிபூர் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
ஜூன் 29, 2025 18:58

ஏப்பா காமெடி பண்றீங்க


venugopal s
ஜூன் 29, 2025 11:30

எல்லைப்புறத்தில் உள்ளே விடுவானேன், அப்புறம் சல்லடை போட்டுத் தேடுவானேன்?


உ.பி
ஜூன் 29, 2025 10:56

தமிழகத்துல பல பகுதியில கூட்டம் மாதிரி பங்களாதேஷிங்க சுத்துராங்க


பேசும் தமிழன்
ஜூன் 29, 2025 09:03

அதென்ன..... கைது செய்யப்படும் அத்தனை திருட்டு கும்பலும் முகமூடி அணிந்து கொண்டு இருப்பது ஏன் ??


oviya vijay
ஜூன் 29, 2025 07:40

கை கால் பிடரியில் கட்டி அவன் தேசத்தின் எல்லையில் தூக்கி எறிய வேண்டும்


Mecca Shivan
ஜூன் 29, 2025 06:46

சென்னை வண்ணாரப்பேட்டை காசிமேடு மேற்கு தாம்பரம் பெரம்பூர், வில்லிவாக்கம் ஆலந்தூர் திருவல்லிக்கேனி பல்லாவரம் இவையெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டிய பகுதிகள், திருப்பூர், திருச்சி திருவெறும்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கூத்தாநல்லூர், திருநெல்வெலி , மதுரை, ஈரோடு, கரூர், வேலூர் வாணியம்பாடி, மேல்விஷாரம், ஆம்பூர், ஓசூர்,


Nada Rajan
ஜூன் 28, 2025 22:37

சல்லடை போடுங்க. துருவி துருவி விசாரிக்க அது என்ன தேங்காய் வா


Iyer
ஜூன் 28, 2025 22:31

நல்ல நடவடிக்கை தான். ஆனால் ஒவ்வொரு ராஜ்யத்திலும் இது போன்ற தீவிர நடவடிக்கை தேவை. 5 கோடி பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் நாடு முழுவதும் பரவி உள்ளார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை