வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படியே ஒவ்வொண்ணுக்கும ஒரு ரேட் பிக்ஸ் பண்ணிட்டா அலைச்சல் மிச்சம் இல்லியா
மும்பை: புது வாகனங்களுக்கான வி.ஐ.பி., நம்பர்களுக்கு ரூ.18 லட்சம் வரை கட்டணம் விதித்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் புதிய வாகனங்களுக்கு வி.ஐ.பி., எண் கொண்ட நம்பர்களை பெறுவது வழக்கம். அந்த வகையில், செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் மும்பையில் புது வாகனங்களுக்கான வி.ஐ.பி., நம்பர் பெறுவதற்கான கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.ரூ.18 லட்சம்
மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களான மும்பை, மும்பை சபர்பன், புனே, தானே, ராய்கட், அவுரங்காபாத், நாஷிக், கோலாப்பூரில், புதிய 4 சக்கர வாகனங்களுக்கு, '0001' என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல், ஆங்கில எழுத்துக்களின் சீரியல்களையும், வாகன உரிமையாளர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்கு ரூ.18 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.12 லட்சமாக இருந்து வந்தது.மேலும், முன்பு தடை செய்யப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி, இந்த வி.ஐ.பி., எண்களை, மனைவி, மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் கார்களுக்கு மாற்றவும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.பைக்குகள்
அதேபோல, '0001' எனும் எண் கொண்ட வி.ஐ.பி., எண்களுக்கான பைக் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கூடுதல் வருவாய்
இந்த வி.ஐ.பி., நம்பர் பிளேட்டுகளின் கட்டணத்தின் மூலம் மட்டும், கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் ரூ.139.20 கோடி கூடுதல் வருவாய் போக்குவரத்து துறைக்கு கிடைத்துள்ளது.
அப்படியே ஒவ்வொண்ணுக்கும ஒரு ரேட் பிக்ஸ் பண்ணிட்டா அலைச்சல் மிச்சம் இல்லியா