உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடப்பாண்டில் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்

நடப்பாண்டில் விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பாண்டில் விமானங்களில், 183 தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து ராஜ்யசபாவில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: ஜூலை 23 நிலவரப்படி, இந்திய விமான நிறுவனங்கள், 183 தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளன. இது, 2023 உடன் ஒப்பிடுகையில், 6 சதவீதம் குறைவு. குஜராத்தின் ஆமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விபத்துக்கு பின், விமானத்தின் முக்கிய சாதனங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை சரிபார்க்கும்படி, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 29, 2025 12:08

உலகெங்கிலும் விமானங்களில் பிரச்சினை. இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தி மக்கள் பயணிக்கவேண்டும். தினம் தினம் மே டே ... தினம் தினம் திக் திக் டே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை