உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2.9 லட்சம் கோடி மத்திய நிதியை வீணடித்த 19 மாநிலங்கள்

ரூ.2.9 லட்சம் கோடி மத்திய நிதியை வீணடித்த 19 மாநிலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : உள்கட்டமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில், 2.9 லட்சம் கோடி ரூபாய் நிதியை, 19 மாநிலங்கள் செலவு செய்யாமல் வீணடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டம், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு, 10.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 28 சதவீத நிதியை மாநிலங்கள் செலவு செய்யாமல் அப்படியே வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.அதாவது, 2.9 லட்சம் கோடி ரூபாய் நிதியை, 19 மாநிலங்கள் வீணடித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் நடப்பு நிதியாண்டு முடிவுக்கு வந்ததும், இந்த வீணடிக்கப்பட்ட நிதி, மீண்டும் மத்திய அரசின் கணக்குக்கு சென்றுவிடும்.மூலதன செலவினத் தொகையை வீணடித்த மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை அப்படியே வைத்துள்ளன. அந்த வரிசையில், மஹாராஷ்டிரா - 59, பீஹார் - 58, ஆந்திரா - 55, உத்தர பிரதேசம் - 52, மேற்கு வங்கம் - 52 சதவீத நிதியை செலவு செய்யாமல் வைத்துள்ளன.இதில், மேற்கு வங்கத்தை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இம்மாத இறுதியுடன் முடிவுக்கு வரும், 2024 - 25ம் நிதியாண்டில், மாநிலங்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா, 1.1 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு ஒதுக்கியது.அதில், 2025 ஜனவரி இறுதி வரை, 29,850 கோடி ரூபாய் கடனை மட்டுமே மாநிலங்கள் பெற்றுள்ளன. மீதியுள்ள கடன் தொகை பெறப்படாமல் அப்படியே உள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Tetra
மார் 24, 2025 12:13

இங்க கொடுத்த படத்துக்கே செலவு செஞ்சது ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. இன்னும் பணம் வாய்ல போட்டுக்கவா


Arachi
மார் 23, 2025 18:43

பணத்தை சிலவு செய்ய தெரியாத மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க வேண்டியது. உண்மையிலேயே தேவைப்படும் தமிழ் நாட்டிற்கு கொடுக்காமல் சாகடிப்பது. ஒருவர் மட்டும் எந்த அளவிற்கு செலவு பண்ணுகிறார். அவரிடம் கொடுத்தால் ஒரேநாளில் செலவு செய்துவிடுவார்.


Ramesh Kumar
மார் 22, 2025 15:43

Maladministration


ஆரூர் ரங்
மார் 22, 2025 12:55

இதே போல இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அரசால் தமிழக உட்கட்டமைப்புகாக 5000 கோடி வட்டியில்லா கடன் ஒதுக்கப்பட்டது. இன்றுவரை நடவடிக்கையில்லை.


Mahendran Puru
மார் 22, 2025 11:06

மிகச் சிறப்பு. மும்மொழி பாஜக ஆளும் மாநிலங்களில் உள்கட்டமைப்புக்கு கொடுத்த நிதியை செலவழிக்க துப்பில்லை. ஆனால் தமிழ் நாட்டிற்கு கல்வி நிதி கொடுக்க மனமில்லை இந்த தேர்தல் பாண்டு ஊழல் புகழ் பாஜக அரசிற்கு. இங்கே பாய் போட்டு படுத்திருக்கும் சங்கிகள் வரவும்.


J.Isaac
மார் 22, 2025 08:13

செலவழிக்கவும். எப்படி வீண்?


Kasimani Baskaran
மார் 22, 2025 07:26

உள்க்கடமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்யக்கூட துப்பில்லை என்றால் நிர்வாகம் மோசம் என்று அர்த்தம்... தாமதத்துக்கான காரணம் உண்மையாக இருந்தால் அதிக காலக்கெடு கொடுக்கலாம்..


கோமாளி
மார் 22, 2025 04:58

எங்க ஆட்சியில் நாங்க கடன் வாங்காத இடமே இல்ல.. வருடம் 14,000 கோடி டாஸ்மாக் விற்பனை அதிகமாக உள்ள போதும், வருசத்துக்கு 1 லட்சம் கோடி அதிகமாக தடன் வாங்குறோம். ஒரு புது திட்டமும் கிடையாது.. 4 முதல் 5 லட்சம் கோடிகளை அரச குடும்பம் கொள்ளை அடித்துவிட்டது


J.Isaac
மார் 22, 2025 08:12

கோமாளி, கோமாளித்தனமாக தான் எழுதுவான்


புதிய வீடியோ