உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1 கிலோ தங்க நகை, ரூ.20 லட்சம் கொள்ளை திருமண வீட்டில் திருடிய 2 பேருக்கு வலை

1 கிலோ தங்க நகை, ரூ.20 லட்சம் கொள்ளை திருமண வீட்டில் திருடிய 2 பேருக்கு வலை

புதுடில்லி:திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த, 1 கிலோ தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகளுடன், 20 லட்ச ரூபாயை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடுகின்றனர்.தெற்கு டில்லியின் சி.ஆர்.பார்க் 'பி' பிளாக் பகுதியில், தங்கள் மகளின் திருமணத்திற்காக, சுனிதா குப்தா என்ற பெண்ணின் குடும்பத்தினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும், 7ம் தேதி நடக்கவிருக்கும் திருமணத்திற்காக நேற்று முன்தினம் பல இடங்களுக்கும் சென்று, ஷாப்பிங் செய்தனர்.நேற்று அதிகாலை வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீடு, அலங்கோலமாக கிடந்தது. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 1 கிலோ தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பியிருந்தனர்.வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்த கொள்ளையர் இருவர், பொருட்களை அங்கும், இங்கும் சிதறி அடித்து, விலை மதிப்பு மிக்க பொருட்களை தேடியுள்ளனர். பணம், நகை கிடைத்ததும், அவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றனர்.சுனிதா குப்தா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் அந்த வளாகத்தில் இருந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவக்கியுள்ள போலீசார் பிடியில் இன்னமும் குற்றவாளிகள் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை