உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

குருகிராம்:தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நீரில் மூழ்கி, இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.கிரேட்டர் நொய்டா, டி பிளாக்கில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்களான சுபாஷ் - ருச்சி தம்பதியின் மகன் பிருத்வி,5. சம்பவத்தன்று வீட்டருகே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். பூங்கா நீரூற்றுக்குள் இறங்கிய அவர், மூச்சுத் திணறி உயிரிழந்தான். நீண்ட நேரமாக மகனைக் காணாமல் தேடிய போது, நீரூற்றில் மகன் உடல் மிதப்பதைக் கண்டுபிடித்து மீட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நொய்டா ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.அதேபோல, ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே ராஜேந்திரா பார்க்கில் வசித்த ஆதி, 13, நண்பர்களுடன் தன்கோட் கால்வாயில் குளித்தான். கால் வழுக்கி ஆழமான பகுதிக்கு சென்ற அவன் நீரில் மூழ்கினான். நண்பர்கள் கொடுத்த தகவல்படி போலீசார் வந்து நீண்ட நேரம் தேடி ஆதி உடலை மீட்டனர். ஆதியின் தந்தை கூலி வேலை செய்கிறார்.இருசம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ