வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐ எ எஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? என நினைவுக்கு எட்டிய வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் அந்த அதிகாரம் உள்ளதாக நினைக்கிறேன்.
திருவனந்தபுரம் : கேரளாவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ததால், அம்மாநில அரசியல்மற்றும் அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழில் துறை இயக்குனராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் போலீசில் அளித்த புகாரில், 'என் மொபைல் போன் எண் 'ஹேக்' செய்யப்பட்டு விட்டது. 'அந்த எண்ணில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சேர்த்து, 'மல்லு ஹிந்து ஆபீசர்ஸ்' என்ற பெயரில் வாட்ஸாப் குழு துவங்கப்பட்டது. இது தெரிய வந்ததும், அந்த குழுவை உடனடியாக கலைத்து விட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, மாநில அரசுக்கு போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். கடும் விமர்சனம்
அதில், 'கோபாலகிருஷ்ணனின் மொபைல் போன், பல முறை 'ரீ செட்' செய்யப்பட்டு விட்டது. அதனால் அவர் கூறியது போல், வாட்ஸாப் எண் ஹேக் செய்யப்பட்டதா என்பதை கண்டறிய முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதே போல்,வேளாண் துறை சிறப்பு செயலரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசாந்த், சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில், கூடுதல் தலைமை செயலர்ஜெயதிலக்கை கடுமையாக விமர்சித்தார். அதில், 'தன் உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகளின் வாழ்க்கையை ஜெயதிலக் அழிக்கிறார். அவர் ஒரு மன நோயாளி' என, பிரசாந்த் தெரிவித்திருந்தார். இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இந்த இரு சம்பவங்களின் அறிக்கைகளை தலைமை செயலரிடம் இருந்து பெற்ற முதல்வர் பினராயி விஜயன், ஐ.ஏ.எஸ்.. அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், பிரசாந்த் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.இது குறித்து, கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இடையே மத ரீதியில் பிளவு ஏற்படுத்தி, ஒற்றுமையின்ைமயை ஏற்படுத்தும் நோக்கில் வாட்ஸாப் குழு ஏற்படுத்தப்பட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர் அதிகாரியை பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இறுதியானது அல்ல
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் சார்பில், கேரள போலீஸ் டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள சட்ட அமைச்சர் ராஜிவ் கூறுகையில், ''சஸ்பெண்ட் நடவடிக்கை இறுதியானது அல்ல. தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டு தீர்வு காணலாம்,'' என்றார். இந்த விவகாரம் கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடையே மட்டுமல்லாமல், கேரள அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த தவறும் இல்லை!ஒருவர், தான் சரியென்று நினைப்பதை சொல்வதில் எந்த தவறும் இல்லை. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. என் சேவையில் நான் பெற்ற முதல் சஸ்பெண்ட் இது; சஸ்பெண்ட் ஆணை கிடைத்ததும் பதிலளிக்கிறேன். - பிரசாந்த்சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி1கடந்த, 2013 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கோபால கிருஷ்ணன் சமீபத்தில், 'மல்லு ஹிந்து ஆபிசர்ஸ்' என்ற வாட்ஸாப் குழுவை துவக்கி, அதில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அதிகாரிகளை இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதும், தன் போன், 'ேஹக்' செய்யப்பட்டு விட்டதாகவும், 'மல்லு முஸ்லிம் ஆபீசர்ஸ்' என்ற பெயரிலும் குழு துவக்கப்பட்டுள்ள தாகவும் போலீசில் கோபால கிருஷ்ணன் புகார் அளித்தார். 2கடந்த, 2007 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரசாந்த், தலித் மற்றும் பழங்குடியினருக்கான நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தும், 'உன்னத்தில்' என்ற துறையின் தலைமை செயல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றினார். அப்போது, இந்த துறையின் முக்கியமான கோப்புகள் மாயமானதாக, கூடுதல் தலைமை செயலர் ஜெயதிலக், சமீபத்தில் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, ஜெயதிலக் மீது சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவுகளை வெளியிட்டதாக பிரசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஐ எ எஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? என நினைவுக்கு எட்டிய வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் அந்த அதிகாரம் உள்ளதாக நினைக்கிறேன்.