2 கிமீ தொலைவு நீளமுள்ள தேசிய கொடி; ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினப் பேரணி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
ரஜோரி: சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் 2 கிமீ தொலைவு நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி நடத்தப்பட்டது. இதில், 5000 பேர் கலந்து கொண்டனர். நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திரங்கா எனப்படும் மூவர்ணக் கொடி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 2 கிமி தொலைவு நீளமுள்ள பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் என 5000 பேர் கலந்து கொண்டனர். இது வருங்கால சந்ததியினருக்கு தேசபக்தியை புகுத்தும் விதமாக இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக ரஜோரி துணை ஆணையர் அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.