உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!

சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில், நக்சல் அமைப்பு தலைவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசிய பூங்கா உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0kd69he1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கடந்த இரு நாட்களாக நடந்த தேடுதல் வேட்டையின்போது, ரூ. 40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பு தலைவன் சுதாகர், தெலுங்கானா மாநில நக்சல் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ், ரூ.45 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தின் மூத்த தலைவன் பாஸ்கர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், 3வது நாளாக இன்று ( ஜூன் 7) பிஜாப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் பிஜாப்பூர் வனப்பகுதியில் மட்டும் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அமித்ஷா பெருமிதம்!இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளைச் சந்தித்து, இந்த நடவடிக்கைகளின் வரலாற்று வெற்றிக்காக அவர்களை வாழ்த்தினேன்.இந்த நடவடிக்கைகளை தங்கள் துணிச்சலால் வெற்றிகரமாகச் செய்த வீரர்களைச் சந்திக்கவும் நான் ஆவலாக உள்ளேன். விரைவில் சத்தீஸ்கருக்குச் சென்று அவர்களைச் சந்திப்பேன்.நக்சலிசத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க மோடி அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 07, 2025 20:49

மொத்தமா அவங்க கதையை முடிக்கவேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூன் 07, 2025 19:17

இதைத்தானே நான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் - தவறு செய்பவர்களை கண்டேன் சுட்டேன் - இது ஒன்று தான் சரியான முடிவாய் இருக்கும். கைது சிறை விசாரணை .......இது வெறும் இழுக்க இழுக்க இன்பமிருதிவரை கதை மாதிரி செல்லும்.


Nada Rajan
ஜூன் 07, 2025 17:07

நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்


முக்கிய வீடியோ