சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சுக்மா சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கு உட்பட்ட சிந்தல்நார் பகுதியில் சிந்தவாகு ஆற்றையொட்டிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் முதல், நக்சல் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் நடந்த இந்த மோதல் நேற்று காலை வரை நீடித்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சல்கள் பலியாகினர். எனினும், கொல்லப்பட்ட இரு நக்சல்களின் உடல்களை சக பயங்கரவாதிகள் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றதால் உடலை மீட்க முடியவில்லை.