உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!

48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவன், 2 பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 48 மணிநேரத்தில் 6 பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட இரு ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் ஐ.ஜி.பி., வி.கே. பேர்டி மற்றும் மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uemkdu45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் கேலர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம். அதேபோல, எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2வது கட்ட ஆபரேஷனை நிகழ்த்தினோம். நாங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நேரத்தில், கிராமத்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முன் இருந்த சவாலாக இருந்தது. அதன்பிறகு, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவனான ஷாஹித் குட்டே, ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தான். மேலும், அவன் பயங்கவாத செயல்களுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தான், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arinyar Annamalai
மே 17, 2025 20:49

உளவு விஷயங்களை கறந்து விட்டு என்கவுன்டர் செய்வதே உத்தமம்


V Venkatachalam
மே 16, 2025 15:43

மேஜர் ஜெனரல் ஜோஷி அவர்களுக்கு என்னுடைய சல்யூட். ஜோஷி அவர்களே பாகிஸ்தான் வாலை ஓட்ட அறுத்து விடுங்கள்.


Arul. K
மே 16, 2025 15:37

வேட்டை தொடரட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை