உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 பேர் பலி

புதுடில்லி:கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். தென்மேற்கு டில்லி குதுப் விஹாரில் புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. நேற்று முன் தினம் மதியம், 2:00 மணிக்கு, ஏழு அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டி மீது கட்டப்பட்டு இருந்த மரக்கட்டைகளை, சுபாஷ்,32, பிரதீப்,22, ஆகிய இருவரும் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் தவறி இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, சாவ்லா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை