உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணியின்போது அலட்சியம் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பணியின்போது அலட்சியம் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பங்கார்பேட்டை: பணியின்போது அலட்சியமாக இருந்ததாக பெமல் நகர் இன்ஸ்பெக்டர் நஞ்சப்பா, ஏ.எஸ்.ஐ., சிவசங்கர் ரெட்டி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.* பெமல் நகர் ஆலமரம் அருகே உள்ள எச்.பி., நகரில், ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், அப்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை அறுக்க முயற்சித்தனர்.இதுதொடர்பாக அப்பெண், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலட்சியம் செய்துள்ளார். எஸ்.பி., சாந்தராஜு உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெமல் நகர் ஆலமரம் அருகே, கஞ்சா வைத்திருந்ததாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த அஜய் சிங் என்பவரை இரவு ரோந்து சென்ற ஏட்டு சந்தோஷ் என்பவர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அவரிடம் விசாரிக்காமல் இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.ஐ., இருவரும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதை பயன்படுத்தி அந்நபர் தப்பிவிட்டார்.அதே நபரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ., பரிதா பானு பிடிக்க முற்பட்டார். அவரை தாக்கிவிட்டு, அஜய் சிங் தப்பினார். இவ்விஷயத்திலும், இன்ஸ்பெக்டரும், ஏ.எஸ்.ஐ.,யும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.விசாரணை நடத்தி, பணியில் அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டர் நஞ்சப்பா, ஏ.எஸ்.ஐ., சிவசங்கர் ரெட்டி ஆகியோரை மத்திய பிரிவு போலீஸ் ஆணையர் லாபுராம் சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ