உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை

வாகனம் நிறுத்துவதில் தகராறு; பீஹாரில் 2 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரா : பீஹாரில் போஜ்பூர் மாவட்டத்தின் லஹார்பா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்த, பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு, வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. அப்போது ஒரு தரப்பினர், துப்பாக்கியால் சுட்டதில், எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை