தங்கும் விடுதியில் தீ விபத்து மும்பையில் 2 பெண்கள் பலி
மும்பை: மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பந்தர் பகுதியில், 11 மாடி கொண்ட தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் கீழ்தளத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக, மற்ற தளங்களுக்கும் தீ பரவியது.தீயணைப்புப் படையினர், சிறிது நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் தீ விபத்தில் காயமடைந்ததுடன், மயக்க நிலையில் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.