உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்; பெண்ணுக்கு வன்கொடுமை; ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்

ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்; பெண்ணுக்கு வன்கொடுமை; ம.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தூர்: மத்திய பிரதேசம் அருகே ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, துப்பாக்கி முனையில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோல்கட்டா சம்பவம்

மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் இளம் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1a8nl64h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூட்டு வன்கொடுமை

இந்த சம்பவம் தொடர்பான பதற்றம் அடங்குவதற்கும் மத்திய பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள அம்பேத்கர் நகருக்கு நள்ளிரவில் இரு இளம் ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல், துப்பாக்கி முனையில், இரு இளம் ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கைது

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயடைந்த இரு ராணுவ வீரர்கள் மற்றும் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களை தாக்கி விட்டு, இளம்பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Yuvaraj Velumani
செப் 20, 2024 08:10

200 உபி ...பிழைப்பு நடத்தும்


premprakash
செப் 12, 2024 14:29

ராணுவ வீரரின் லக்ஷணம் இதுதான். இவங்க சொந்த பெண்னையே உயிரை கொடுத்து காப்பாத்த முடியல. நாட்டை எப்படி காப்பாத்த போறாங்களோ..


Lion Drsekar
செப் 12, 2024 12:07

வன்கொடுமை செய்வதற்கு உரிமைபெற்றவர்கள் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே, இனி இப்படித்தான் இருக்கும், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்


radha
செப் 12, 2024 11:43

பர்ரேத் மத்தாக்கி .......


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 11:21

இவனுங்களை அடிச்சு துவைச்சு மேட்டர் பண்ணுன அந்த ஆறு ஏழு பேரையும் ராணுவத்துல சேருங்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2024 11:12

நீங்கள்லாம் நாட்டை பாதுகாப்பதில் பிசியா இருக்கீங்க ன்னு நாங்க உருட்டிக்கிட்டு இருக்கோம் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2024 11:11

நள்ளிரவில் இரு இளம் ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளனர். டூ இன் ஒன் தப்பாச்சே கோவாலு ????


kantharvan
செப் 12, 2024 14:50

இப்போ என்ன சொல்லி முட்டு கொடுக்கிறது?? ராணுவ வீரர்களை நாம் மதிக்கும் லட்சணம் இதுதானா?? அப்படி னுவாளே ??பயத்தை வெளியே காமிச்சுக்காம அப்படியே சைலண்ட்டா மெயிண்டைன் பண்ணுவோம்


ஆரூர் ரங்
செப் 12, 2024 11:01

ராணுவப் பயிற்சி பெற்று வரும் காலத்தில் பெண் நண்பர்களுடன் உல்லாசப் பயணம்? இதுவே விசாரிக்க வேண்டிய விஷயம்.


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 11:22

இதுவும் பயிற்சிதான் ..... குண்டுக்கு வேலை கொடுக்கணும் .....


kantharvan
செப் 12, 2024 14:55

மபி என்பதற்கு பதில் பெங்கால் என்றோ தாநா என்று இருந்தால் தங்கள் அறிவு எப்படியெல்லாம் கருத்து எழுதி இருக்கும் என்று நினைக்கும்போதே வியப்பு ஏற்படுகிறது. ஒருவேளை துர்நடத்தை கொண்ட அந்த கயவர்களை?? பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் அவர்கள் மீதே விசாரணை வைக்க வேண்டுமாம். கயவர்களுக்கு மாலை மரியாதையை செய்து கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டுமா?? என்ன ?


Velan Iyengaar
செப் 12, 2024 09:57

ராமராஜ்ஜியம்


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 11:31

ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் கொலை நடக்குற மாநிலத்துலேர்ந்து கூவுற தகுதி ஒரு கொத்தடிமைக்கும் இல்லை .....


chennai sivakumar
செப் 12, 2024 08:42

நம் நாட்டில் தண்டனைகள் கடுமை ஆக்க போவது இல்லை. இது போன்ற குற்றங்களும் குறைய போவது இல்லை. பத்திரிகைகள் பக்கங்களை நிரப்ப இது போன்ற செய்திகள் உதவுகிறது. படிப்பவர்களுக்கு நேரம், காலம் விரயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை