பஸ் கவிழ்ந்து 20 பக்தர்கள் காயம்
கோலாரில் இருந்து 50 பக்தர்கள், சக்தி மாலை அணிந்து நேற்று காலை தனியார் பஸ் ஒன்றில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழகத்தின் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி என்ற மலைப் பகுதியில் பஸ்சில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த 20 பக்தர்கள் காயம் அடைந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.காயம் அடைந்தவர்கள், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். - நமது நிருபர் -