உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள கோர்ட்டுகளில் 20 லட்சம் வழக்குகள் தேக்கம்; நீதி கிடைப்பதில் தாமதம்: மக்கள் கடும் பாதிப்பு

கேரள கோர்ட்டுகளில் 20 லட்சம் வழக்குகள் தேக்கம்; நீதி கிடைப்பதில் தாமதம்: மக்கள் கடும் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரள கோர்ட்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 லட்சம் வழக்குகள் விசாரித்து முடிக்கப்படாமல் தேங்கி உள்ளதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது. கேரள முன்னணி நாளிதழ் ஒன்றின் விவரப்படி மொத்தம் இதுவரை 19 லட்சத்து 92 வழக்குகள் தேங்கி உள்ளது. இதில் கேரள ஐகோர்ட்டில் 2ல ட்சத்து 52 ஆயிரம் வழக்குகளும், மாவட்ட, மாஜிஸ்திரேட், முன்சீப் கோர்ட்டுகளில் 17 லட்சத்து 39 ஆயிரம் வழக்குகள் தேங்கி உள்ளன. நாள்தோறும் பதிவாகும் வழக்குகள் அதிகரித்து கொண்டே போவது சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது. 67 ஆயிரத்து 756 வழக்குகள் 10 வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளது . இதில் 36, 693 வழக்குகள் ஐகோர்ட்டிலும், 31 ஆயிரத்து 63 வழக்குகள் கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது. 2ல ட்சம் சிவில் வழக்குகளும், 52 ஆயிரத்து 159 வழக்குகளும் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. மூத்த குடிமக்கள் பதிவு செய்த வழக்குகள் ஒரு லட்சத்து 32 ஆயிரம், பெண்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரம்.

திருவனந்தபுரத்தில் அதிகம்

மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் அதிகபட்ச வழக்குகள் பதிவானதாக தெரிய வந்துள்ளது. இம்மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரம் , இதில் கிரிமினல் வழக்குகள் 2 லட்சத்து 87 ஆயிரத்து 295. எர்ணாகுளம், கொல்லம் 2வது, 3வது இடத்தை பிடிக்கிறது. வயனாட்டில் மட்டும் 25, 945 வழக்குகள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜன 05, 2025 07:46

வங்க தேச நீதிபதிகள் அம்பது பேர் ட்ரெய்னிங் எடுக்க வர்ராங்களாம். நேரா கேரகாவுக்கு அனுப்பிடலாம்.


vijay,covai
ஜன 05, 2025 06:29

தேவை இல்லாத விசயங்களுக்கு வழக்கு போட்டால் அப்படித்தான் இருக்கும்


Ramesh Sargam
ஜன 04, 2025 19:58

ஒட்டுமொத்த இந்தியாவில் பல கோடி வழக்குகள் தேக்கம். நீதித்துறை மற்றவர்களை தண்டிக்கும். ஆனால் இப்படி பல லட்சம், பல கோடி வழக்குகளை தேக்கிவைத்து மெத்தனமாக நடக்கும் நீதித்துறையினரை யார் தண்டிக்கமுடியும்?


GMM
ஜன 04, 2025 19:43

வழக்குகள் தேங்கும், அதிகரிக்கும். எந்த சிக்கலும் இல்லாமல் வருமானம் வரும் ஒரே இந்திய தொழில் வக்கீல் தொழில். தணிக்கை, பத்திரிகை யாரும் உள்ளே பார்க்க முடியாத இரும்பு திரை. வழக்கை முடிக்க விட மாட்டார்கள். மாநில சட்ட துறை ஒரு பிரிவை ஏற்படுத்தி, வழக்கு விவரங்கள் வாங்கி, நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு, சிவில் தாவாவை எளிதில், சமரசம் செய்து முடித்து வைக்க முடியும். 3ம் தலைமுறை வரை வழக்கை இழுத்து, புரோக்கர் மூலம் சமரசம் செய்து, வாதி, பிரதிவாதிகளை சந்நியாசி ஆக்கிவிடுவர் .


என்றும் இந்தியன்
ஜன 04, 2025 18:34

20 லட்சம் கேரளாவில் x 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசம் = 5.6 கோடி வழக்குகள் வருகின்றது இந்தியா பூராவும் இந்த எண்ணிக்கை


K.n. Dhasarathan
ஜன 04, 2025 17:49

நீதி துரையின் அலட்சிய போக்கும், கால விரயத்தால் மக்கள் நீதி கிடைக்காமல் மாண்டு கூட போவதுண்டு, நீதி அரசர்கள் மெத்தனப்போக்கும், எளிதில் ஜாமீன் வழங்குவதும், கீழ் கோர்ட்டுகள் தீர்ப்புகளை கொஞ்சமும் மதிக்காமல் மாற்றி தீர்ப்புகள் வருவதும் நீதி துரையின் மாண்பை குறைத்து விட்டது. அடுத்து கடுமையான தண்டனைகள் கிடையாது, அரபு நாடுகளில் போதை பொருட்கள் வைத்திருந்தாள் தூக்குத்தான், வேறு மாற்றமே கிடையாது, இங்கே எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும், போதை கலாச்சாரம் வளர்ந்ததிற்கும் காவல் துரை, நீதி துறை இரண்டுமே பொறுப்பு.


Nagarajan D
ஜன 04, 2025 16:01

வாய்தாக்களும் இடைக்கால தடைகளும் ஜாமீன்களும் மட்டுமே கிடைக்கும் ஒரே இடம் நமது நீதிமன்றங்கள்


புதிய வீடியோ