உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனி ஒருவனாக ஆற்றை சுத்தம் செய்யும் ம.பி., மாணவர்: பாராட்டு குவிகிறது

தனி ஒருவனாக ஆற்றை சுத்தம் செய்யும் ம.பி., மாணவர்: பாராட்டு குவிகிறது

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் அசுத்தமாக இருந்த நதியை தனி ஒருவனாக சுத்தம் செய்து பலரின் பாராட்டை பெற்று உள்ளார்.மபியின் ராஜ்கர் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதியாக அஜ்னார் நதி விளங்குகிறது. அம்மாவட்டத்தின் பயோரா நகரின் முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. தொழிற்சாலை கழிவுகள், நகர்ப்புற கழிவுகள் கலந்த இந்த நதி மாசுபட்டது. மேலும் பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.இதனைக் கண்ட பயோரா பகுதியைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது மாணவர் அந்த நதியை சுத்தப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார். அதற்கு தேவையான பொருட்களை தனது சொந்தப் பணத்திலேயே வாங்கி உள்ளார்.நதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை, கையுறை அணிந்து அகற்றியுள்ளார். குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் பல இடங்களில் அந்த நதி தூய்மையாகக் காணப்படுகிறது.இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, ஒரு விவாதத்தை அது ஏற்படுத்தியது.பொது இடங்களையும், ஆறுகளையும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டியது யார் பொறுப்பு? யார் பொறுப்பாக வைத்திருக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பினர்.உள்ளாட்சி அமைப்புகளிடம் மேற்கொள்வதற்கான வளங்களும் பொறுப்புகளும் உள்ள ஒரு வேலையை தனி நபர் ஒருவர் செய்வதாக பலர் தெரிவித்தனர். பலர் பல வகையான கருத்துகளை கூறினாலும் அந்த மாணவரை பாராட்டி வருகின்றனர்.அதேநேரத்தில் ஒரு சிலர் பிட்டு தபாஹியை விமர்சிக்கவும் செய்தனர். உண்மையில் நதியை சுத்தம் செய்யாமல், சுத்தப்படுத்துவது போன்று வீடியோ எடுத்து வைரல் செய்வதாக குற்றம்சாட்டினர்.இதனையடுத்து சமூக ஊடகத்தில் பிட்டு தபாஹி அளித்த விளக்கத்தில் எப்படி அந்த நதியை சுத்தம் செய்தது குறித்தும், எத்தனை நாட்கள் ஆனது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sugumaran M
செப் 04, 2026 16:02

இது போன்ற மோசமான நிலை வேலூரில் உள்ள பாலாற்றின் ஆற்றுப்படுகை பாலத்தை ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. அதற்கான துறை உரிய நடவடிக்கையை உடன் எடுத்தால் வரப்போகும் கண மழையில் ஆறும்மமக்களும் பயன் பெறுவார்கள்.


Sugumaran M
செப் 04, 2026 15:42

What the Department of River Conservancy Who the part of PWD is doing. Where the POLLUTION CONTROL BOARD has gone. Are they are busy in getting bribe and no time to look after the Public problems of the nation for which they have been paid the salary. If they have done their duty properly the situation for a single person yo clean the river would not have raised. Public also have the responsibility not to put Plastics every where and the Ground get closed for rainwater to enter into earth. Public have the First responsibility not to destroy the Energy Earth given by God as their wealth.


Subramanian
செப் 04, 2026 07:25

வாழ்த்துக்கள்


சந்திரன்
செப் 04, 2026 00:06

பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி. இங்கும் சில பேர் உங்களைப் போலவே சுத்தப் படுத்துவதாக கூறி நாலு பேரை சேர்த்துக் கொண்டு நாலு நாள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். தன்னைத் தானே விளம்பரம் செய்து கொள்வார்கள். அப்புறம் பார்த்தால் திடீரென காணாமல் போய் அமெரிக்காவிலோ, லண்டனிலோ மேடையில் தோன்றுவார்கள்.அது போல இல்லாமல் களத்தில் தனி ஒருவனாக நிற்கின்றீர்களே மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி.


Easwar Kamal
செப் 03, 2026 22:58

தம்பி அப்படியே சென்னையில் கூவம்னு ஒரு ஆறு இருக்கு. வரவனுங்க எல்லாம் 1000 கோடி செலவாகும் 10,000 கோடி செலவு ஆகும். அமெரிக்கா கிட்ட ஜப்பான் கிட்ட காசு கேட்ருக்கோனு சொல்லிக்கிட்டு மக்களை ஏமாத்தறானுவ. அந்த நாதாரிகள் எல்லாம் இதை பார்க்கணும். கொஞ்சம் உள்ளூரிலேயே முயற்சி செய்தல் கண்டிப்பாக நல்ல results கிடைக்கும.


Ramesh Sargam
செப் 03, 2026 21:58

தனி ஒருவன், அதுவும் ஒரு 20 வயது மாணவன் செய்யும் இந்த நல்லபனியை, பலர் வேலை செய்யும் அரசாங்கம் ஏன் செய்வதில்லை?


பைரவன்
செப் 03, 2026 21:13

சமூகத்தில் இருந்து அனைத்து வளங்களையும் துய்க்கும் ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்துக்கு தங்களது பங்கைத் திருப்பி அளிக்க வேண்டும். யாராவது செய்வார்கள் என்று ஒதுங்குவோர் நன்றி இல்லாத சுயநலவாதிகள்.


சாமி
செப் 03, 2026 21:03

வாழ்த்துக்கள் தம்பி. தனி ஒருவனாக தங்கள் சாதனைக்கும,சாதனை தொடரவும் மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி.


தப்பு
செப் 03, 2026 19:47

வேளச்சேரி ஏரியின் நிலைமையை டீவியில் வாரம் ஒரு முறை ஒளி பரப்பு செய்தாலாவது விடிவு பிறக்குமா?


KRISHNAN R
செப் 03, 2026 19:16

இந்த பொறுப்புணர்சி நல்லதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை