உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு பெண் கொடூரக்கொலை; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

மைசூரு பெண் கொடூரக்கொலை; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு: கர்நாடகாவில் திருமணம் மீறிய உறவில் இருந்த 20 வயது பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை கைது செய்து, அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஹுன்சூர் தாலுகா கெரசனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா. 20 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. கணவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜூ என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சலிகிராமா கிராமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், ரக்ஷிதாவை சித்தராஜூ கொலை செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து சித்தராஜூவை கைது செய்து, ரக்ஷிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பு வைத்தனர். மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசார் கூறுகையில், 'சித்தராஜூவுடன் ரக்ஷிதா திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இருவரும் இடையே எழுந்த சண்டையின் போது ரக்ஷிதா கொலை செய்யப்பட்டார். செல்போன் வெடித்து ரக்ஷிதா உயிரிழந்ததாக காதலன் நாடகமாட முயன்றுள்ளார். வெடிமருந்து குச்சிகளை வாயில் திணித்து வெடிக்க வைத்து ரக்ஷிதா கொல்லப்பட்டுள்ளார். இதில் அவர் முகம் சிதைந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பான தடயவியல் துறையினருக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழன்
ஆக 26, 2025 12:55

தவறான வழியில் சென்றதால் சரியான தண்டனை பரவா இல்லையே கடவுள் அப்ப அப்ப கண்ண திறப்பார் போல


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 06:31

கள்ளத்தொடர்பு என்பது மிகவும் எளிதாகிவிட்டது .......


Padmasridharan
ஆக 26, 2025 05:59

இவனுக்கு குடிப்பழக்கம் உண்டா சாமி, ஆண்களுக்கு இயற்கையிலேயே மற்றவர்களை அடக்க வேண்டுமென்று ஆணவமுள்ளது. ஆனால் கெட்ட பழக்கங்களை அடக்க மறுக்கின்ற குணம். தாய்க்கும், சகோதரிக்கும், மற்ற வீட்டு பெண்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் ஏராளம். அதனால்தான் அதிகாரம் செய்யும் காவல்துறைக்கு அதிகம் சேர நினைப்பர். மற்றவர்களுக்கு அதிகார தொல்லைகள் கொடுக்கவும், யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்று பா. ஜ கட்சிதான் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டவேண்டும் ஆனால் பொருளாதாரத்தை மட்டுமே ஹிந்துக் கடவுள்களின் மூலமாகவும் உயர்த்துகின்றனர். ராமர், சீதை இன்னும் புராணக்கதை அளவிலேயே உள்ளது, நிஜத்தில் குறைந்து கொண்டு வருகின்றது.


Karuthuraja
ஆக 26, 2025 03:50

தாம்பத்திய உறவுக்கான வயதுதான், கணவனை விவாகரத்து செய்து விட்டு அவனை திருமணம் செய்து இருக்கலாம்.... இப்போ சிலநிமிட சந்தோசம் உயிரை வாங்கி விட்டது.


M Ramachandran
ஆக 26, 2025 00:37

நம்ம ஊர் ஒரு துண்டு கருப்பு கண்ணாடி செய்த மாதிரி இன்னோரு மனிதர் களின் பொண் டாடியைய்களை லவுட்டிக்கிட்டு துணைவி,இணைவி, அக்குளுக்கு பிணை ஒருத்தி வச்சுக்கிட்டு திரிந்த பெரிய பெரியா மனிதனாக திரிந்து வந்திருந்தால் சிறைய்ய்க்கு செல்ல வேலாண்டி இருந்திருக்காது. சமூகத்தில் அந்தஸ்து கூடியிருக்கும். மற்றவர்களும் யோனாகியன் வாரான் கண்ணால படாமல் உள்ளே போடி. என்று மனைவியாய்ய்ய மறைத்து வைத்து அபோயிட்டானா கண்டம் தப்பித்தோம் என்று மிக மனா நிம்மதியாக இருப்பார்கள். இன்னொரு கிசு கிசு ஓடுது. இப்போ இருக்கும் அரசர் பழைய கழக கண் மணியாகிய சினிமாவில் கோலால் ஓச்சியவரின் வாரிசமெ. முக ஜாடையும் ஒத்து போவதாக வேறு ஒரு ஊடகத்தில் உலா வந்து கொண்டிருக்கு. துண்டும் உண்மைய கூற முடியாமல் மனம் வெதும்பி பட்டது அரசராக முடி சூட்டிக்கொண்டு வாரிசை விரட்டிவிட்டு துண்டையும் ஒரு வேண்டிய மருத்துவமனை உதவியில் வைத்து கதைய்ய முடித்ததாக வேறு ஒரு கதை ஓடுதாம். எல்லாம் வல்ல இறைவனுக்கும் அந்த திகில் குடும்பத்திற்குமெ வெளிச்சம் என்கின்றனர். கேட்டால் திராவிடதால் வந்த மாயையை என்கின்றனர் என்ன தான் நடக்கும் நடக்குட்டுமே தன்னாலே வெளிவரும் தயநங்காதே பழைய பெரிய தலை தன்னை ஓரம் கட்டின்னால் வெளி வரும் என்கின்றனர்.


ஆரூர் ரங்
ஆக 25, 2025 21:41

ராசாத்தி மாதிரி வாழ வேண்டிய வயசுல..


V Venkatachalam
ஆக 25, 2025 21:54

ரங்கண்ணே நீங்க ராசாத்தியை ஞாபக படுத்துறீங்க? அவள் எத்தனை கோடி திருட்டு பணத்துக்கு அதிபதி? வருங்காலத்தில் எந்த குழந்தை க்கும் ராசாத்தி ன்னு பேர் வைக்க கூடாது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 25, 2025 21:30

அது என்ன திருமணம் கடந்த உறவு..... என்றால் இழிவாக இருக்கிறதா????


V Venkatachalam
ஆக 25, 2025 21:56

இழிவாக இல்லை. கேவலமா இருக்கு. இன்னும் சொன்னா, அசிங்கமா இருக்கு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 25, 2025 21:02

இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனியாக விட்டுவிட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது நாட்டிற்கு கணவன் சென்றுவிட்டால் இப்படித்தான் நடக்கிறது. பெண்ணிற்கு தாம்பத்ய உறவில் தீவிர விருப்பம் ஏற்படுகிற வயது. கணவனால் பயனில்லை என்றால் வேலி தாண்டி போகிறார்கள். ஒழுக்கம் வேண்டும் என்று சொன்னாலும் இளமையின் வேகத்தை தடைபோடுவது கஷ்டம். கணவர்களுக்கு ஒரே அறிவுரை மனைவியுடன் இருக்க முடியுமென்றால் திருமணம் செய்யுங்கள் பயன்படாத, பேருக்கு கணவனாக இருப்பது உங்களுக்கு பெரும்பாலும் அவமானத்தையே தேடித்தரும். ராணுவ வீரர்களின் மனைவியருக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களின் தியாகம் வீரர்களின் தியாகத்தைவிட உயர்ந்தது.


raja
ஆக 25, 2025 20:46

இங்கே தமிழகத்தில் சார் என்கிற எங்கள் உடன் பிறப்புக்கள் இதே காரியத்தை செய்வானுவோடா....


Natchimuthu Chithiraisamy
ஆக 25, 2025 20:02

அந்த பெண் வாதங்கள் முடிந்தது. இளம் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒழுக்கமே மேன்மை தரும்


சமீபத்திய செய்தி