மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'
17-Oct-2024
பெலகாவி: திருமண ஆசை காட்டி, சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெலகாவி மாவட்டம், கோகாக்கின், கொளவே கிராமத்தைச் சேர்ந்தவர் கெம்பண்ணா, 29. இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காதலிப்பதாக நாடகமாடினார். 2018 நவம்பர் 14ம் தேதி, திருமணம் செய்து கொள்ளலாம் என, ஆசை காட்டி அழைத்துச் சென்று, அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர், கோகாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்படி கெம்பண்ணாவை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பெலகாவியின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில், கெம்பண்ணாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி புஷ்பலதா நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சட்டசேவைகள் ஆணையம் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டார்.
17-Oct-2024