உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; விரைந்தனர் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு; விரைந்தனர் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர். மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரு சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய கூகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பாதுகாப்புப் படையினருடன் சண்டையில் ஈடுபட்டனர். அதில், போராட்டக்காரர்கள், 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை மீண்டும் தலைதூக்கியது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்நிலையில், வன்முறை மீண்டும் அதிகரித்து வருவதால், 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில், மாநிலம் முழுவதும் 90 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் கூறியதாவது: இன்று நாங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் பாதுாப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். ராணுவம், போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போதைய நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivagiri
நவ 23, 2024 19:53

அமெரிக்காவிலேயே சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற முடிவு செய்து விட்டார் ட்ரம்ப் - இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய நாடு - இந்தியாவை விட கால்பங்குதான் மக்கள் தொகை - - அவர்கள் இப்போதே விழித்துக் கொண்டு விட்டார்கள் . . .உலகம் முழுவதும் இப்போது எல்லா நாடுகளும் விழித்து கொண்டு சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து தற்காத்து கொண்டார்கள் - - இட்டாலி , அரேபியன்ஸ் , ஐரோப்பியன்ஸ் , ரஷ்ய சீன , ஆஸ்திரேலியா , . . . அரேபியன்ஸ் உட்பட , இஸ்லாமிக் நாடுகள் , முஸ்லிமாக இருந்தாலும் ஊடுருவல்களை , உள்ளே விடுவதில்லை - பசி பட்டினியால் செத்துக் கொண்டிருந்தாலும் , தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள் , காசா மக்கள் உதாரணம் . . இங்கே இன்னும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ஊடுருவி , தேசத்தை நாசம் பண்ணுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் . . . சட்டங்களை கடுமை ஆக்கி அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் . . . யாரெல்லாம் சட்டவிரோத குடியேறிகளை ஆதரவு கொடுக்கிறார்களோ , யாரெல்லாம் பிரச்சாரம் பண்ணுகிறார்களோ அவர்களையம் குற்றவாளிகளாக ஆக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . . .


Rpalnivelu
நவ 23, 2024 13:29

ஆட்டுவிக்கும் சீனாவின் பொருளுதவியும், அதற்கு ஒத்து ஊதும் போலி காந்தியும் மற்றும் டீப் ஸ்டேட் மத மாற்றிகள். மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் தொலைத் தொடர்பு துண்டிப்பு உடனடி தேவை


S.Martin Manoj
நவ 23, 2024 11:43

திறனற்ற உள்துறை


V. SRINIVASAN
நவ 23, 2024 11:05

உங்கள் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தான் நடக்கின்றது கடந்த 18 மாதமாக இதே எதிர் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்றால் விட்டு வைத்து இருப்பார்களா


பாமரன்
நவ 23, 2024 10:08

மிகவும் தாமதமான நடவடிக்கையா இருந்தாலும் இப்போ அனுப்பி வைத்திருக்கும் படையினரை சும்மா மார்ச் ஃபாஸ்ட் செய்ய சொல்லாம யார் வாலாட்டினாலும் ஒட்ட நறுக்க சொல்லனும்... கூடவே மிக்சர் சாப்டுக்கிட்டு இருக்கும் முதலமைச்சரை தூக்கிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் வேலையை மத்திய அரசு, பிரச்சினை குரூப்ஸ் மற்றும் மாநில அரசுடன் சேர்ந்து குழு அமைத்து செய்யனும்... ஏற்கனவே ஏகப்பட்ட டேமேஜ் ஆயிடிச்சு பெயர்... இனிமேலும் கம்பெனி சும்மாயிருந்தா ...ஒன்னியும் சொல்றதுக்கில்ல... பகோடாஸ் எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்காதான்...அவனான்ட கேளுன்னு சொல்லி கடுப்பேத்த வாணாம்னு கேட்டுக்ககிறேன்...


Mario
நவ 23, 2024 09:15

ஒருவரை தவிர


ديفيد رافائيل
நவ 23, 2024 08:58

எவனோ ஒருத்தன் இந்த மாதிரி தூண்டி விட்டு அவன் அமைதியாகிடுவான் அதனால வந்த பிரச்சினை தான் இது. வேற வழியே இல்லை இதுக்கு ஒரே முடிவு மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு மற்றும் mobile internet and broadband connection எல்லாவற்றையும் தடை செய்யனும் one month க்கு. கடுமையான ஊரடங்கு one month போட்டு ஒருத்தனையும் வீட்டை விட்டு வெளியே வர விட கூடாது கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சி மாதிரி இருக்கனும்.


karthik
நவ 23, 2024 08:42

மணிப்பூர் கலவளரத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. இதற்க்கு மேலும் கலவரக்காரர்களை வளரவிட்டால் மிக பெரிய ஆயுத குழுவாக மாறிவிடுவார்கள்.


SUBBU,
நவ 23, 2024 07:54

Deepstate seems desperate now after Trump being elected. Be it Manipur,Bribery case on Adani,Giving Nod to Ukraine to attack Russia with Distance range missiles show their desperation. Recently Adani d to invest 10 Billion in US after Trump election. So Deepstate seems rattled.


Kasimani Baskaran
நவ 23, 2024 07:54

தீவிரவாதம் செய்யும் எவனையும் விடக்கூடாது. தூண்டுபவர்களை மொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.


முக்கிய வீடியோ