உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் 13 பெண் நக்சல்கள் உட்பட 21 பேர் சரண்; அக்., மாதத்தில் மட்டும் வன்முறையை கைவிட்ட 238 பேர்!

சத்தீஸ்கரில் 13 பெண் நக்சல்கள் உட்பட 21 பேர் சரண்; அக்., மாதத்தில் மட்டும் வன்முறையை கைவிட்ட 238 பேர்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பின் தளபதி, 13 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 21 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பஸ்தர் மலைத்தொடரின் கான்கர் மாவட்டத்தில் நக்சல் அமைப்பின் தளபதி, 13 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 21 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.இவர்கள் போலீசாரிடம் மூன்று ஏகே-47 ரக துப்பாக்கிகள், 303 துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தனர். சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இது அமைந்து உள்ளது. கடந்த அக்டோபர் 17ம் தேதி ஜக்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை நக்சலைட்டுகள் 238 பேர் வன்முறையை கைவிட்டு, அரசின் மறுவாழ்வு கொள்கையை ஏற்றுக் கொண்டு சரண் அடைந்திருக்கின்றனர் என்று தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ