மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
சாம்ராஜ்நகர்: பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில் 30 நாட்களில் 2.16 கோடி ரூபாய் கிடைத்தது.சாம்ராஜ்நகர் ஹனுாரில் அமைந்துள்ள மலை மஹாதேஸ்வரா மலை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் ஒன்று. இயற்கை காட்சிகள் நிறைந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். எனவே கோவிலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.ஒரு மாதத்திற்கு பின், நேற்று முன் தினம் கோவிலின் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் உண்டியல் செலுத்தப்பட்டிருந்த காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இரவு 7:00 மணி வரை நீடித்தது. 2,16,34,614 ரூபாய் கிடைத்தது. 78 கிராம் தங்கம், 2.35 கிலோ வெள்ளி காணிக்கை செலுத்தப்பட்டிருந்தன.வெளிநாட்டு கரென்சிகள், புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் மதிப்புள்ள 12 நோட்டுகளும் உண்டியலில் கிடைத்தன. பவுர்ணமி, அமாவாசை, பொங்கல் பண்டிகை இருந்ததால், பக்தர்கள் பெருமளவில் வந்ததால், காணிக்கையும் அதிகம் கிடைத்துள்ளது.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1