ஒடிசாவில் 22 நக்சல்கள் சரண்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள், டிஜிபி முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர்.2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல் அற்ற இடமாக மால்காங்கிரியை மாற்ற பாதுகாப்புப் படையினர் இலக்கு வைத்துள்ள நிலையில், இன்று 22 நக்சல்கள் சரண் அடைந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர்.சரணடைந்தவர்களில் ஒரு டிவிஷனல் கமிட்டி உறுப்பினர், மற்றும் 6 ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் அடங்குவர்.சரண் அடைந்தவர்கள் அனைவர் மீதும் ரூ.2 கோடிக்கும் அதிகமான சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஒடிசா அரசின் நக்சல் சரணடைதல் மற்றும் புனர்வாழ்வு கொள்கையின் கீழ், இவர்கள் ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக ரூ.25,000 நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு வீடு, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் இதர அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது.