உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் 2,200; பாக்.,கில் 112: ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை குறித்து மத்திய அரசு பட்டியல்

வங்கதேசத்தில் 2,200; பாக்.,கில் 112: ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை குறித்து மத்திய அரசு பட்டியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 வன்முறை சம்பவங்களும், பாகிஸ்தானில் 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது, '' என பார்லிமென்டில் மத்திய அரசு கூறியுள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5f3xivvf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக2022 ல் 472023 ல் 3022024 டிச., 08 வரை 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.இதுவே பாகிஸ்தானில்2022 ல் 2412023 ல் 1032024 அக்., வரை 112 வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வங்கதேச அரசுடன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது.பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தூதரக ரீதியில் அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மத சகிப்புத்தன்மை, மதவெறி வன்முறை, முறையான துன்புறுத்தல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளோம். மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை சர்வதேச அரங்குகளில் இந்தியா எடுத்துக் காட்டுகிறது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தவிர, வேறு எந்த அண்டை நாட்டிலும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இவ்வாறு அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Haja Kuthubdeen
டிச 21, 2024 19:26

பத்து பேரை நூறு பேரு அடிப்பது ஆண்மைதனம் அல்ல.... கோழைகள். பங்ளாதேஸ் சுதந்திரத்திற்கு நம்நாடு மிகப்பெறும் பங்காற்றியதை மறந்து நன்றி கெட்டதனமா நடப்பது முறைகேடான செயல்.மத சிறுபாண்மை மக்களிடம் அன்புடன் ஆதரவுடன் நடந்து கொள்ள வேண்டும்..நாடு துண்டாடப்பட்டதால் பாதிக்கப்பட்டது அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள்தான்.இறைவன்தான் அனைவருக்கும் நல் புத்தியை கொடுக்கனும்.


Ramesh
டிச 21, 2024 07:55

அதனால் என்ன நாங்கள் வங்காள தேசத்துடனும் பாகிஸ்தானுடனும் கிரிக்கெட் விளையாடி இதை கொண்டாடி மகிழ்வோம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 07:25

பாக் மற்றும் பங்களாதேஷில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய ஹிந்துக்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் ???? இந்தியாவில் ஏகனின் இறுதித்தூதர் அவமதிக்கப்பட்டதாகக் கூறி இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் ????


J.V. Iyer
டிச 21, 2024 04:23

சொன்னால் பத்தாது. அங்கு போய் உடனே அவர்களை காப்பாற்றுங்கள். வாய்ச்சவடால் எதற்கு. செயலில் காட்டுங்கள்.


xyzabc
டிச 21, 2024 00:52

இந்த வன்முறையை கண்டிப்பது எப்படி ?


Priyan Vadanad
டிச 20, 2024 23:07

எளியவனை வலியோன் வதைத்தால் வலியோனை தெய்வம் வதைக்கும் என்பது பழமொழி. காலம் மாறும்.


Haja Kuthubdeen
டிச 21, 2024 19:27

உண்மை


Priyan Vadanad
டிச 20, 2024 22:58

நீங்க வேற/ கறி சாப்பிடும் யாராச்சும் நம்ம நாட்டுல இப்படி எதனாச்சும் நடந்துச்சுதான்னு கேட்டுடப்போறாங்க/


முக்கிய வீடியோ