உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ராணுவத்தில் 11 ஆண்டுகளில் 23 ஆயிரம் வீரர்கள் ராஜினாமா: பிஎஸ்எப் முதலிடம்

துணை ராணுவத்தில் 11 ஆண்டுகளில் 23 ஆயிரம் வீரர்கள் ராஜினாமா: பிஎஸ்எப் முதலிடம்

புதுடில்லி: துணை ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களில் 23 ஆயிரம் பேர் கடந்த 11 ஆண்டுகளில் ராஜினாமா செய்துள்ளனர். இதில் எல்லை பாதுகாப்புப் படை முதலிடத்தில் உள்ளது.இது தொடர்பாக லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அது தற்போது வெளியாகி உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2025ம்ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் துணை ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களில் 23,360 பேர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்அதில் அதிகபட்சமாக எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எப் படையைச் சேர்ந்த - 7,493சிஆர்பிஎப் வீரர்கள்- 2456சிஐஎஸ்எப் வீரர்கள் - 4,134 இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் - 1,967சாஸ்திர சீமா பால் எனப்படும் எஸ்எஸ்பி வீரர்கள் - 1934அசாம் ரைபிள்ஸ் படையின் 371 வீரர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டுகள் அடிப்படையில், 2024 ம் ஆண்டில் மட்டும் 3,077 பேர் ராஜினாமா செய்தனர். குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டில் 959 வீரர்கள் ராஜினாமா செய்தனர். 2016 முதல் 2022ம் ஆண்டு வரையில் ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.2023ம் ஆண்டு 2,471 பேரும், 2014 ம் ஆண்டு 2,033ம் பேரும்2015ம் ஆண்டு 2070 பேரும் 2016 ல் 1,363 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.தற்கொலை2023முதல் 2025ம் ஆண்டு வரயைிலான காலகட்டத்தில் 438 பேர் துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 2023 ல் 157 பேரும்2024 ல் 148 பேரும்2025 ல் 133 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.தற்கொலை செய்து கொண்டவர்களில் 159 பேர் சிஆர்பிஎப் வீரர்கள்120 பேர் பிஎஸ்எப் அமைப்பை சேர்ந்தவர்கள்60 பேர் சிஐஎஸ்எப் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ