உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடில்லி: காவிரியில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இன்று நடந்த கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படவில்லை. அடுத்த கூட்டம் ஜூன் மாதம் முதல் வாரம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
மே 21, 2024 20:00

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளதுஆனால் இந்த உத்திரவை யார்தான் மதிக்கிறார்கள் மதிக்க முடியாதா ஆட்சி நடப்பதால் இந்த உத்திறவை வெறும் தண்ணீரில் எழுதிய உத்திரவுபோலத்தான் ஆகும்


R SRINIVASAN
மே 21, 2024 19:34

தென்மேற்கு பருவமழை தீவிரமாகிக்கொண்டு இருக்கிறது இதனால் கர்நாடகாவில் வெள்ளம் வரும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அந்த உபரி தண்ணீர் தமிழ் நாட்டிற்கு வந்தால் தமிழ்நாடு அழிவது உறுதி ஆகையால் அய்யாக்கண்ணு அவர்களை அனுப்பி தடுப்பணைகளை எங்கே உருவாக்கலாம் என்பதை தமிழ்நாடு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கலாம் ஏன் என்றால் இனி சனாதன எதிர்ப்பு, ப்ராஹ்மண எதிர்ப்பு , ஜாதி மோதல் போன்ற ஏந்தவாதமும் எடுபடாது இப்புழுதெ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் அழிந்து விடுவார்கள்


S Manikandan
மே 21, 2024 17:46

தண்ணீர் தர முடியாது என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க


sethu
மே 21, 2024 16:39

பதவியில் இல்லாதபோது திமுக தமிழனுக்காக போராடுவதுபோல நாடகம் நடத்தும் பதவிக்கு வந்துவிட்டார் கர்நாடக அரசுக்காக போராடும் ,இது காலம் காலமாக நடக்கும்


chennai sivakumar
மே 21, 2024 16:38

நீங்க உங்கள் கடமையாகிய உத்தரவு போடுவதை செய்யுங்கள் நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்


ஆரூர் ரங்
மே 21, 2024 16:38

மேக்கே தாட்டு அணைக்கு தடை போடாம இருந்தா இருவருக்கும் நல்லது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ