உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு

ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த நிதியாண்டில் மட்டும், 25,009 போலி நிறுவனங்கள், 61,545 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப் பயன் மோசடி செய்துள்ளதை, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில், 1,924 கோடி ரூபாய் மீட்கப்பட்டு; 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் 42,140 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்; இவை 1.01 லட்சம் கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப் பயன் மோசடி செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை, இதில் 3,107 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும்; 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் ஒரே பொருளுக்கு இரண்டு முறை வரி செலுத்தாமல் இருப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஐ.டி.சி., எனும் உள்ளீட்டு வரிப் பயன்.இதன்படி, நிறுவனங்கள் மூலப் பொருள் வாங்கும்போது விற்பனையாளருக்கு செலுத்திய வரியை, இறுதியாக முழு உற்பத்திக்கு பிறகு செலுத்தும் வரியில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.ஆனால், பல்வேறு நிறுவனங்களும் இதை தவறாக பயன்படுத்தும் வகையில், போலி நிறுவனங்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAVI
ஏப் 22, 2025 13:35

மிக சரி என்ன செய்வது ஏழை சொல் அம்பலம் ஏறாது அல்லவா


J.Isaac
ஏப் 22, 2025 12:06

எல்லாம் ஜெய்ஸ்ரீராம் குரூப்பாக தான் இருக்கும்.


J.Isaac
ஏப் 22, 2025 12:02

90 % வட இந்தியர்களாக தான் இருக்கும். பேச்சு வார்த்தைக்காக பெயர் ரகசியமாக இருக்கும். அதைபோல் ஆடிட்டர்கள் பங்கு இல்லாமல் இது நடக்காது அரசால் பாமர மக்கள், மாக்களாக்கப் படுகிறார்கள்.


GMM
ஏப் 22, 2025 11:29

மூல பொருள் வரி, மக்களிடம் வசூல் ஆகாது. நிறுவனம் மின், நீர், குப்பை அகற்ற அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய கட்டணம். மூல பொருள் மூலம் நுகர் பொருள் பல மடங்கு விற்பனைக்கு வரி மக்களிடம் வசூல். மக்கள் பிறர் உழைப்பை பயன்படுத்தி, தன்னால் தயாரிக்க முடியாததால், அரசுக்கு வரி செலுத்தும் நிலை. மூல பொருள் மூலம் வசூலித்த வரியை விற்பனை பின், நிறுவனத்திற்கு திரும்ப கொடுப்பது ஒரு தவறான முறை. அதனை மக்கள் செலுத்திவிடுவர். மக்களுக்கு திருப்பி கொடுக்க முடியாது. நிறுவனத்திற்கு திரும்ப கொடுக்க கூடாது. ஊழல் விதி?


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 22, 2025 10:56

மீதி 60000 கோடி பிஎம் கேர்ஸ் கமிசனா?


Amar Akbar Antony
ஏப் 22, 2025 09:57

ஒருவருடைய தனிப்பட்ட நிலம் சொத்து அவரது இஷ்டப்படி மதிப்பை வைத்துக் கொள்ளலாம். இந்த விளக்கம் ஒரு சாக்கு போக்கு. அப்போ அரசு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை கருப்பு பணம் அல்லது அரசுக்கு கொடுக்காத வரி என்றும் கொள்ளலாம் அல்லவா? இதைத்தான் நான் கூறுகிறேன் மோசடி என்று. இதைதவிர்க்க மார்க்கெட் விலைக்கு விட்டுவிட்டு வாரியாக ஒட்டுமொத்தமாக ஒன்று அல்ல இரண்டு விழுக்காடு வரி விதித்தால் கருப்பை ஒழிக்கலாமே


Kalyanaraman
ஏப் 22, 2025 09:32

நாட்டிலேயே அதிக வரி மதிப்பு உள்ள மதுபானத்தை டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட அதிகமாக, பில் இல்லாமல் , பில் கேட்டாலும் கொடுக்காமல் விற்பனை நடக்கிறது. இது உலகத்துக்கே தெரிந்த விஷயம். இருப்பிடம் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீதிமன்றம் ஏதாவது செய்திருக்கிறதா?? திருட்டை தனி மனிதன் செய்தால் தண்டனை கிடைக்கும். மாநில அரசே செய்தால் அதற்கு விலக்கு உண்டோ ??


பாமரன்
ஏப் 22, 2025 13:39

பாஸ் நீங்க டாஸ்மாக் போகாதீங்க... எல்லாம் ஏமாத்துகாரணுவ... நம்ம கம்பெனியாளுக கூட யாரும் போகக்கூடாது... எப்படி யாவாரம் பண்றானுவன்னு பார்ப்போம்... யாவாரம் ஆனால் தானே ஃப்ராடு பண்ண முடியும்... என்ன நான் சொல்றது


சுரேஷ்சிங்
ஏப் 22, 2025 09:09

புதுசு புதுசா ஊழல் ஸ்டார்ட் அப்பில் நாமதான் முன்னால இருக்கோம்னு ஜீ பெருமிதம்.


அப்பாவி
ஏப் 22, 2025 09:08

புடிச்சது இவ்ளோ புடிபடாம பல லட்சம் கோடிகள் இருக்கும். எல்லாம் ஒன்றிய அரசின் ஆளுமை.


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 10:49

ஜாபர் சாதிக் ஆளுங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான், ஒரு கணக்கு வழக்கு கிடையாது. எல்லாம் துண்டுசீட்டு கணக்குவழக்கு இல்லா திருட்டு வணிகம் தான். மறைமுக வரி ஏய்ப்பு வேற இந்த லட்சணத்தில் பேச வருவீங்க நீங்க எல்லாம்? வெட்கமா இல்ல?


Amar Akbar Antony
ஏப் 22, 2025 08:18

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மோசடி, ஊழல் என்றெல்லாம் ஏமாற்று வழியில் பணம் பெறுவதும் கொடுப்பதும் குற்றமானால்?? அதேப்படி காலி நிலம் வீடு கட்டிடங்கள் எல்லாம் அரசு விலை ஒன்று சந்தை விலை ஒன்று என்று விற்கிறோம் வாங்குகிறோம் ஏழை குடிமகன் முதல் பெரும் நீதிபதிகள் வரை இது அறிந்து நடக்கக்கூடிய மகா மோசடியன்றோ?? ஏன் எந்த அரசும் அரசிற்கும் மேலே உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாத? அது மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளனர் ? கூட்டு களவாணிகள்?


Kalyanaraman
ஏப் 22, 2025 09:26

ஒருவருடைய தனிப்பட்ட நிலம் சொத்து அவரது இஷ்டப்படி மதிப்பை வைத்துக் கொள்ளலாம். வாங்குபவர்கள் அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே வாங்க முடிவெடுத்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை