வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த சாதிப்படங்களை கணக்கில் சேர்க்காதீர்கள் - அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்
புதுடில்லி: 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ஹிந்தியில் வெளியான 'லாப்பட்டா லேடீஸ்' படம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் என மொத்தம் 29 படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ct4ioopj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சினிமா உலகில் பெரிய விருதாக பார்க்கப்படுவது, 'ஆஸ்கர்' விருது. எப்படியாவது இந்திய படம் ஒருமுறையாவது இந்த விருது பெற்று விடாதா என்பதே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்து வருகிறது. எட்டாக்கனியாக இருந்துவந்த ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வென்று இந்திய சினிமா ரசிகர்களின் தாகத்தை தணித்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார், இசை அமைப்பாளர் கீரவாணி. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான படங்களில் இருந்து ஒரு படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பாக ஹிந்தியில் வெளியான 'லாப்பட்டா லேடீஸ்' படத்தை அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்த சாதிப்படங்களை கணக்கில் சேர்க்காதீர்கள் - அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்