உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தல்; 2வது விமானம் பிப்.,15ல் வருகை

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தல்; 2வது விமானம் பிப்.,15ல் வருகை

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அழைத்து வரும் 2வது விமானம் நாளை (பிப்ரவரி 15) பஞ்சாபில் தரையிறங்குகிறது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், பஞ்சாபின் அமிர்தசரசுக்கு கடந்த பிப்., 5ம் தேதி வந்து சேர்ந்தனர். இந்த, 104 பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக இடம்பெற்று இருந்தனர்.அவர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காக உள்ளூர் ஏஜன்டுகளை நம்பி, 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து, ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். முறையான விசா இன்றி வெவ்வேறு நாடுகள் வழியாக அழைத்து செல்லப்பட்டு, அமெரிக்காவில் அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்த கண்ணீர் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.இந்நிலையில், 2வது விமானம் நாளை (பிப்.,15) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்குகிறது. ஏற்கனவே, '487 இந்தியர்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே, 'குஜராத், ஹரியானாவில் விமானங்கள் ஏன் தரையிறங்கவில்லை' என பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சீமா கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும் அவர், 'நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் அமிர்தசரஸில் தரையிறங்குவதை உறுதி செய்வதன் மூலம் பஞ்சாபை அவதூறு செய்ய அரசாங்கம் விரும்புகிறது. ஹரியானா அல்லது குஜராத் மாநிலத்தில் ஏன் தரையிறங்க கூடாது? இது பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பா.ஜ.,வின் முயற்சி என்பது தெளிவாகிறது. இந்த விமானம் ஆமதாபாத்தில் தரையிறங்க வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

venugopal s
பிப் 14, 2025 11:34

நாடு கடத்தப்பட்டு வந்த முதல் விமானத்தில் அதிகமாக இருந்தவர்கள் குஜராத்திகள் தான்.


guna
பிப் 14, 2025 11:56

ஆமாம் திராவிட சொம்புகளுக்கு அவளோ திராணி இல்லை


sfm.krr
பிப் 14, 2025 13:20

குஜராத்தியும் இந்தியன் தானா?


Barakat Ali
பிப் 14, 2025 09:39

ன்றைய காங்கிரஸ் அரசாளும் சரி, இன்றைய பாஜக அரசாளும் சரி .... இதற்குத் தீர்வை எட்டமுடியவில்லை ....


ஆரூர் ரங்
பிப் 14, 2025 09:28

ஏஜெண்ட் க்கு கறுப்புப் பணத்தை கொடுத்து வெளிநாட்டில் குடியேற முயற்சித்திருக்கிறார்கள். மணி லான்டரிங் சட்டம் கடவுச்சீட்டு சட்டம் என இரண்டு சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக இவர்களை உடனே கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு சாதிச் சங்கங்கள் ஆதரவளித்தால் அவற்றுக்கும் தடைவிதிக்க வேண்டும்.


பாமரன்
பிப் 14, 2025 09:40

கரீக்டு ரங்கிடு... ஆனால் குறுக்க இந்த கவுசிக் வந்தால்??? அதாவது அவனுவ நாங்க குஜ்ஜன்க ஹிந்துக்கள் அப்பிடின்னு சொன்னால்...??? ம்ம்ம்ம்


veeramani
பிப் 14, 2025 09:13

அமெரிக்காவில் திருட்டுத்தனமாக குடியேறிகல் எந்த நாடாயினும் சரி, கிரிமினல்கள்தான். உலகின் அனைத்துநாடு சட்டங்களும் கிரிமினல்களை கைவிலங்கிட்டு தான் எங்கும் கூட்டிச்செல்லும். இவர்களுக்கு பரிதாபம் படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நமது பாரத துணைக்கண்டத்தில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் சரியாக இல்லாதபோது எப்படி டேரிகளான ரோஹிங்கியா, பங்காளதேசி முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க முடியாது மேலும் இந்த வந்தேறிகளை தயவு தாட்சண்யம் இல்லாமல் விலங்குகள் போல அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பவேண்டும் முட்டாள்தனமாக உளறவேண்டாம்


பாமரன்
பிப் 14, 2025 09:48

முதலில் நாம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் ரோஹிங்யாக்கள் மற்றும் பங்க்ளாதேஷிகளுக்குள்ளான வித்தியாசங்களை புரிஞ்சிக்க கும். முதல் வகை திமிரில் போய் பெட்டக்ஸ் பிஞ்சி இந்தியாவுக்கு அவப்பெயருடன் வருபவர்கள்... அடுத்தது மியான்மார் அரசின் கொடுமைகள் தாங்காமல் வரும் அகதிகள்... (இலங்கை தமிழர் வந்தது மாதிரி)... கடைசி வகையினர் வியாபாரம் வேலை மருத்துவத்துக்காக வந்து இந்தியாவில் தங்கிவிடுபவர்கள்... இவர்களிலும் விசா இல்லாமல் கள்ளத்தனமாக ப்ளான் பண்ணி அதாவது அமெரிக்கா போன இந்திய புல்லுறுவிகள் போல வந்தவர்கள் உண்டு... இப்ப சொல்லுங்க மதங்களை தாண்டி இவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டியவர்கள்ன்னு...???


தமிழ்வேள்
பிப் 14, 2025 16:15

பாமரரரே , அகதியாக துரத்தப்பட்டு வருபவனுக்கு , இந்த நாட்டில் எதற்காக ஷரியத் வேண்டும் ? இஸ்லாமிய மயமாக்குவோம் என்று கூவவேண்டும் ? கொலை ,கொள்ளை , வன்புணர்வு என்று குற்றம் செய்யவேண்டும் ? அகதிக்கு சோறு போதாதா ? மதமும் , பன்றி குட்டி போடுவது போல குழந்தைகளும் -அதாவது எதிர்கால பயங்கரவாதிகள் - தேவையா ?


பாமரன்
பிப் 14, 2025 08:44

ஒரு பகோடா பீஸாவது நாட்டுக்கு அவப்பெயர் தேடித்தந்த இந்த ஓடுகாலிகளை கைது செய்து விசாரிக்கனும்னு சொல்லுதா...


guna
பிப் 14, 2025 09:42

திருட்டு திராவிடனுகும் சேர்த்து லாடம் கட்டணும்


PR Makudeswaran
பிப் 14, 2025 10:31

யார் இவர்கள் சென்ற விதம் ஒழுங்கு நியாயம் என்று கருத்து சொன்னது வன்மம் கூடாது அது பாவம். மற்றவரை குறை விரல் நீட்டி குற்றம் சொல்லும் பொழுது மூன்று விரல்கள் நம்மை தான் சுட்டி கொண்டிருக்கும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 11:39

இவர்களில் யாரும் திராவிடர் இல்லை. guna மாதிரி ஐ டி களுக்கு சுய புத்தியே கிடையாது. திராவிடம், திமுக தாண்டி வேற எதுவும் யோசிக்க அறிவும் கிடையாது, பாவம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:47

மனித உரிமை மீறல் என்று காங்கிரஸ், திமுக கதறிய பொழுது இது அவர்களது நடைமுறை ன்னு நேர்ந்து விடப்பட்ட அறிவாலய காமெடி பீசுகள் மவுனம் காத்தது ஏன் ??


பாமரன்
பிப் 14, 2025 08:30

ஏதோ போருக்கு சென்று வெற்றிக்கனி எடுத்து வர்றமாதிரி தலைப்பு... இவனுக போனது கொழுப்பெடுத்து திருட்டுத்தனமாக... ஆக்சுவலா அட்லீஸ்ட் நிம்மியாவது இவனுக எப்படி காசு குடுத்தானுவன்னு கண்டுபுடிச்சி வரி வசூல் பண்ணனும்...


Kasimani Baskaran
பிப் 14, 2025 08:24

காலிஸ்தானிகள் வந்தால் விமானத்தில் இருந்து நேரடியாக கடலில் தள்ளி விடலாம்.


அதுல்சிங்
பிப் 14, 2025 08:09

எல்லாம் சுமுகமா பேசி முடிச்சுட்டு வருவோம் ஹை.


enkeyem
பிப் 14, 2025 12:53

ஆமாம் ஹை. அடுத்து இங்கிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இதர கள்ளக்குடியேறிகளையும் இதே பாணியில் அடித்து டிபோர்ட் செய்வோம் ஹை. அப்புறம் இன்னும் நல்லா கதறி கத்து ஹை


Palanisamy Sekar
பிப் 14, 2025 07:51

ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் சுற்றுப்பயண விசாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலே தங்கினால் அது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்கு உள்ளாக கூடும் என்றுகூடவா தெரியாமல் போனார்கள். கைவிலங்கு கால்விலங்கு போடுவது என்பது அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரோத்தான் எனப்படும் பிரம்படி கொடுத்து அனுப்புவார்கள். முறையான வேலை விசா இல்லாமல் போவோர் நிச்சயம் தண்டனைக்கு உட்பட்டே ஆகணும். உங்க சவுகரித்துக்காக கைவிலங்கு போடாமல் அனுப்புவது என்பது அறிவீனம் ஆகும்.


பேசும் தமிழன்
பிப் 14, 2025 07:43

ஒரு நாட்டுக்குள்... உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவும் இவர்கள் தேச விரோத ஆட்கள் இவர்களை பிடித்து ஜெயிலில் அடைத்து... உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.


புதிய வீடியோ