வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Name will not be revealed because they may be Bangladeshi illegal immigrants
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. கண்காணிப்பு கேமரா இங்கு, ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர், தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அந்த மாணவியின், 'மொபைல் போனை' பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் மொபைல் போனை தருவதாக கூறினர். இதையடுத்து, பணத்தை எடுத்து வர மாணவியின் நண்பர் சென்ற நிலையில், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர்.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட் ட மாணவியின் நிலையை அறிந்த அவரது நண்பர், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பியோடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கில் இன்று (அக் 12) 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.
Name will not be revealed because they may be Bangladeshi illegal immigrants