உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளில் 3 திருமணம் செய்து மோசடி; கில்லாடி பெண்ணை கைது செய்தது போலீஸ்!

10 ஆண்டுகளில் 3 திருமணம் செய்து மோசடி; கில்லாடி பெண்ணை கைது செய்தது போலீஸ்!

டேராடூன்: 10 ஆண்டுகளுக்களில் 3 பேரை திருமணம் செய்து விட்டு, பின்னர் விவாகரத்து செய்து, அவர்களிடம் இருந்து செட்டில்மென்ட் என்ற பெயரில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்த உத்தரகண்ட் மாநில பெண் சீமா போலீசாரிடம் சிக்கியுள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் நிக்கி என்ற சீமா. இவர் கடந்த 2013ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சிறிது நாட்களில் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த நபரை விவாகரத்து செய்து விட்டார். அந்த நபரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி செட்டில்மென்ட் என்ற பெயரில் ரூ.75 லட்சம் பெற்றார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 2017ம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு சாப்ட்வேர் டெலவல்பர் வேலை செய்யும் நபரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபரை விவாகரத்து செய்து விட்டு, செட்டில்மென்ட் என்ற பெயரில் ரூ.10 லட்சம் பெற்றார். பின்னர் அவர் 2023ம் ஆண்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நபரின் வீட்டில் இருந்து ரூ. 36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்து ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சீமா 10 ஆண்டுகளுக்களில் 3 பேரை திருமணம் செய்து விட்டு, பின்னர் விவாகரத்து செய்து, அவர்களிடம் இருந்து செட்டில்மென்ட் என்ற பெயரில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்தது தெரியவந்துள்ளது. பொதுவாக பணக்கார ஆண்கள், மனைவியிடம் இருந்து பிரிந்து வாழும் ஆண்கள் ஆகியோரை குறிவைத்து சீமா கல்யாணம் செய்து கொண்டு பணத்தை வசூலித்தது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N.Purushothaman
டிச 24, 2024 13:22

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் இருக்கு ....


Suppan
டிச 23, 2024 20:53

இது என்ன பிரமாதம் ? இன்னொரு பெண் ஏழு பேர்களை திருமணம் செய்து கொண்டு ஆறு பேர்களிடம் ஜீவனாம்சம் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஏழாவது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறதாம் . நீதிபதி அவருடைய வழக்கறிஞரிடம் முந்தைய கணவர்களின் விவரங்களையும் கேட்டிருக்கிறார் .


Barakat Ali
டிச 23, 2024 20:38

அந்த வாரிசு பெண் அரசியல்வாதியும் கூட .....


Rasheel
டிச 23, 2024 18:58

பெண்கள் சுதந்திரம்


Saravanan D
டிச 23, 2024 16:36

Based on your first few lines of news., she has been taking legal steps only. Married, couldn't get along and divorced! She follows the protocol. There are several people cheating their spouse but acting as genuine couple. Compared to such couples , what she does is right and straightforward.


Senthoora
டிச 23, 2024 15:25

பரவாய் இல்லையே, சிரித்துக்கிட்டே போஸ்கொடுகிறாங்க. 4 கல்யாணம் ரேடி போல, யாரோ ஒரு போலீஸ் ஐயா போல்தெரியுது.


Anantharaman Srinivasan
டிச 23, 2024 15:18

புழக்கத்திலிருக்கும் வன்முறை சட்டம் பெண்களுக்கு தோதாகயிருக்கிறது. நீதிபதிகளும் பெண்கள் பால் இறக்கப்பட்டு நீதி வழங்குகிறார்கள்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 23, 2024 14:05

Dont under estimate the Power of a Common Woman.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை