உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேற்று மிக்-29 ரக போர் விமானம்; இன்று கடற்படை ஹெலிகாப்டர்: என்னதான் நடக்குது அடுத்தடுத்து!

நேற்று மிக்-29 ரக போர் விமானம்; இன்று கடற்படை ஹெலிகாப்டர்: என்னதான் நடக்குது அடுத்தடுத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'ராஜஸ்தானில் நேற்று இந்திய விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், இன்று (செப்.,03) குஜராத், போர்பந்தர் அருகே கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம், நேற்று ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. விமானி காயமின்றி உயிர் தப்பினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. விமான தீ பிடித்து எரிந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

3 பேர் மாயம்!

இந்நிலையில், இன்று(செப்.,03) குஜராத், போர்பந்தர் அருகே கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. கப்பலில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் கடலில் விழுந்த மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் குஜராத் வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
செப் 03, 2024 14:34

இன்னும் சிறந்த பயிற்சி தேவை.


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 12:38

போர் என்று வந்தால் என்ன செய்யப்போகிறோம் ???? நம்மை நாமே தாக்கிக்கொள்வோமோ ????


Ramesh Sargam
செப் 03, 2024 12:22

காரணம் பல. அதில் ஒரு சில இங்கே. நம் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவையாக இருக்கலாம். போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம். அதை இயக்குபவர்கள் போதிய பயிற்சி எடுக்காமல் இயக்கி இருக்கலாம். அதிக காற்று, மழை, புயல் போன்ற இயற்கை இடையூறாகவும் இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை