உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியதாவது: சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய விஜய் மாசி, அக்ரேஜ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகிய மூன்று கூட்டாளிகளை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த குற்றவாளிகள் தரம்ப்ரீத் சிங் அல்லது தர்ம சந்து மற்றும் ஜஸ்ஸா ஆகியோருடன் தொடர்புடையவர்கள்.இவர்களிடமிருந்து 3 க்ளாக் பிஸ்டல்கள், 4 மொபைல் போன்கள் ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், மூவரும் சர்வதேச குற்றவியல் கும்பல்களுடன் தீவிரமாக தொடர்பில் இருப்பதாகவும், சட்டவிரோத ஆயுத விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட, பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை நேற்று பஞ்சாப் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Front End Developer PCL
மே 05, 2025 16:11

பயங்கரமாதம் வேரோடு அளிக்கப்பட வேண்டும்


Nada Rajan
மே 05, 2025 15:49

பயங்கரமாதம் வேரோடு அளிக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை