மேலும் செய்திகள்
சிட்டி க்ரைம்
17-Oct-2024
மீரட்,:உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் திக்ரி கிராம வயலில் கடந்த 5ம் தேதி மூன்று காளைகள் வெட்டப்பட்டு இறந்து கிடந்தன. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, ஷாஜஹான்பூரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தினர். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர். விரட்டிச் சென்ற போலீசார், ரகானா கால்வாய் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி மூவரையும் கைது செய்தனர்.டில்லி பஹர்கஞ்ச்சை சேர்ந்த ஆகாஷ், அவரது சகோதரர் கோபால் மற்றும் அலோக் என்பதும் திக்ரியில் காளைகளை வெட்டிக் கொன்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
17-Oct-2024